தமிழ்நாடு

பேஸ்புக் மூலம் அறிமுகம்.. திருமண ஆசை காட்டி ஏமாற்றிய காதலன்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு !

பேஸ்புக் மூலம் பழகிய காதலன் ஏமாற்றியதால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக் மூலம் அறிமுகம்.. திருமண ஆசை காட்டி ஏமாற்றிய காதலன்..  இளம்பெண் எடுத்த விபரீத முடிவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை அருகே உள்ள ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் கீர்த்திகா. இவர் குரோம்பேட்டையில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் பேஸ்புக் மூலம் சுதீஷ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் பார்க்,பீச் என பல இடங்களில் ஒன்றாக சுற்றிவந்துள்ளனர். கீர்த்திகாவை திருமணம் செய்வதாக கூறி அவருடம் சுதீஷ் பலமுறை தனியாக இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து தன்னை சீக்கிரம் திருமணம் செய்யுமாறு கீர்த்திகா கூறி வந்துள்ளார்.

பேஸ்புக் மூலம் அறிமுகம்.. திருமண ஆசை காட்டி ஏமாற்றிய காதலன்..  இளம்பெண் எடுத்த விபரீத முடிவு !

பலமுறை அதை மறுத்த சுதீஷ், பின்னர் ஒருநாள் உன் மீது காதல் எல்லாம் கிடையாது. இனிமேல் நீ எனக்கு போன் செய்து தொந்தரவு செய்யாதே, உன்னுடன் தனியாக இருக்கத்தான் பழகினேன் என்று கூறியுள்ளார். மேலும் அதன் பின்னர் கிருத்திகாவிடம் பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சில நாட்களாக கிருத்திகா வீட்டில் யாரிடமும் பேசாமல் தனியாகவே இருந்துள்ளார். இது குறித்து வீட்டில் உள்ளவர்கள் கேட்டதற்கு பதில் ஏதும் கூறாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், பெற்றோர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் வீட்டின் மேல் அறைக்குள் சென்ற கிருத்திகா கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பெற்றோர் தங்கள் மகள் தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ந்துள்ளனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவஇடத்துக்கு வந்த பல்லாவரம் போலிசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பேஸ்புக் மூலம் அறிமுகம்.. திருமண ஆசை காட்டி ஏமாற்றிய காதலன்..  இளம்பெண் எடுத்த விபரீத முடிவு !

மேலும், கிருத்திகா எழுதிவைத்த தற்கொலை கடிதம் ஒன்று போலிஸாருக்கு கிடைத்துள்ளது. அதில் தான் ஏமாற்றப்பட்டது தொடர்பாக அனைத்து விவரங்களையும் அவர் கூறியுள்ளார். மேலும் தனது செல்போனில் இருந்து அவரது அண்ணனுக்கு ஆடியோ பதிவு ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

பின்னர் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணின் தற்கொலைக்கு காரணமான சதீஷை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories