தமிழ்நாடு

தமிழகத்தை உலுக்கிய கும்மிடிப்பூண்டி 3 வயது வடமாநில சிறுமி வன்கொடுமை.. வேடிக்கை பார்க்கும் சிங்கப்பெண் படை

விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு ஆட்சியில் பெண்கள், குழந்தைகள் என தொடர்ந்து அடுத்தடுத்து பாலியல் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை உலுக்கிய கும்மிடிப்பூண்டி 3 வயது வடமாநில சிறுமி வன்கொடுமை.. வேடிக்கை பார்க்கும் சிங்கப்பெண் படை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளது. இந்த தொழிற்சாலைகளுக்கு வட மாநிலங்களில் இருந்து பெரும்பாலான தொழிலாளர்கள் வந்து தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிப்காட் பகுதியை ஒட்டியுள்ள ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் வடமாநில தம்பதியின் 3 வயது பெண் குழந்தை நேற்று (ஜூன் 14) மாலை காணாமல் போயுள்ளது. இதனால் பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அந்த குழந்தையை தேடி அழைந்தனர். அப்போது அந்த கிராமத்தின் அருகாமையில் உள்ள முட்புதரில் ஒன்றில் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு சிறுமி கிடந்ததை கண்டறிந்தனர்.

தமிழகத்தை உலுக்கிய கும்மிடிப்பூண்டி 3 வயது வடமாநில சிறுமி வன்கொடுமை.. வேடிக்கை பார்க்கும் சிங்கப்பெண் படை

தொடர்ந்து அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே இந்த விவகாரம் பெரும் பூதாகரமான நிலையில், அந்த சிறுமியை வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் அழைத்துச் சென்றதாக அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறினார். இதைத்தொடர்ந்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிபின் மஞ்சி (19) என்ற இளைஞரை அங்கிருந்த மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து பொதுமக்களின் வலியுறுத்தலின்பேரில் போக்ஸோ வழக்குப்பதிவு செய்த போலீசார், சென்னை புழல் சிறையில் அந்த வட மாநில இளைஞரை போலீசார் அடைத்துள்ளனர். அதேசமயம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அந்த 3 வயது சிறுமி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழகத்தை உலுக்கிய கும்மிடிப்பூண்டி 3 வயது வடமாநில சிறுமி வன்கொடுமை.. வேடிக்கை பார்க்கும் சிங்கப்பெண் படை

இதனிடையே அதேபோல் பாதிக்கப்பட்ட சிறுமியை 3 வட மாநில இளைஞர்கள் அழைத்துச் சென்றதாக கூறப்படும் நிலையில், மற்ற 2 வடமாநில நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சிப்காட் காவல் நிலையத்தை நேற்று இரவு அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்த நிலையில் திரும்பி சென்றனர்.

தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் சிறுமி உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். உடல் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதோடு மட்டுமில்லாமல், சிறுமியின் பெற்றோரை சந்திக்கவும் அனுமதி மறுத்துள்ளனர்.

தமிழகத்தை உலுக்கிய கும்மிடிப்பூண்டி 3 வயது வடமாநில சிறுமி வன்கொடுமை.. வேடிக்கை பார்க்கும் சிங்கப்பெண் படை

தற்போது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது பொதுமக்களை காவல்துறை தடுத்து நிறுத்தியதால் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

பெண்கள் பாதுகாப்பு என்று வாய் கிழிய பேசிய விஜய், தான் ஆட்சிக்கு வந்தவுடன் அதனை கண்டுகொள்ளாமல் இருப்பது வாக்களித்த மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஜய் ஆட்சியில் தின்தோறும் 10-க்கும் மேற்பட்ட பாலியல் புகார்கள் குவிந்த வண்ணமாக இருக்கும் நிலையில், சிங்கப்பெண் படை அமைதிப்படையாக இருப்பது பொதுமக்களிடம் கடும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.

banner

Related Stories

Related Stories