தமிழ்நாடு

“5G அலைக்கற்றை ஒதுக்கீடு - காவி கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கு உதவி செய்த மோடி அரசு”: தீக்கதிர் ஏடு விளாசல்!

ஒன்றிய அரசு 5 ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்திருக்கும் விதமும், நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் ஏலத்தொகையும் கூட்டுக்கொள்ளையின் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது என தீக்கதிர் தலையங்கம் தீட்டியுள்ளது.

“5G அலைக்கற்றை ஒதுக்கீடு - காவி கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கு உதவி செய்த மோடி அரசு”: தீக்கதிர் ஏடு விளாசல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஒன்றிய அரசு 5 ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்திருக்கும் விதமும், நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் ஏலத்தொகையும் கூட்டுக் கொள்ளையின் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது என தீக்கதிர்' நாளேடு 3.7.2022 அன்று "கூட்டுக் களவாணிகள்” என தலையங்கம் தீட்டியுள்ளது. அது வருமாறு :

ஒன்றிய அரசு 5ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்திருக்கும் விதமும், நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் ஏலத்தொகையும் கூட்டுக்கொள் ளையின் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. ஒன்றிய அரசு 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கான அடிப்படை மதிப்பாக ரூ. 4.3 லட்சம் கோடி நிர்ணயித்திருந்தது. ஆனால் இதில் 71 சதவிகிதம் ஏலம் விடப்பட்டிருக்கும் நிலையில் அரசிற்கு ரூ.3 லட்சம் கோடி கிடைத்திருக்க வேண்டும்.

ஆனால் வெறும் 1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி மட்டுமே கிடைத்திருக்கிறது. மோடி அரசு தெரிந்தே அரசிற்கு 1லட்சத்து 50 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அடிப்படை மதிப்பிற்குக் குறைவாக ஒதுக்கீடு செய்ய வேண்டிய அவசியம் என்ன? இதன் பின்னணியில் நடந்திருக்கும் பேரம் என்ன?

“5G அலைக்கற்றை ஒதுக்கீடு - காவி கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கு உதவி செய்த மோடி அரசு”: தீக்கதிர் ஏடு விளாசல்!

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த தனியார் நிறுவனங்கள் 20 ஆண்டு பயன்பாட்டிற்கான இந்த ஏலத்தொகையையும் ஒரே தவணையில் செலுத்த வேண்டியதில்லை. ஆண்டிற்கு ஒரு தவணை என்ற முறையில் 20 ஆண்டுகள் செலுத்திக் கொள்ளலாம். கடைத் தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பது போன்று தேசத்தின் சொத்துக்களைத் தனது காவி கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கு கூறு போட்டுக் கொடுக்கிறது.

அவ்வளவு ஏன் அரசு நிறுவனமாக பி.எஸ்.என்.எல்-க்கு 5ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய மறுக்கும் மர்மம் என்ன?பி.எஸ்.என்.எல்.க்கு 5ஜி அலைக்கற்றையை வாங்கும் கட்டமைப்பு இல்லை என்று ஒன்றிய அரசு கூறுகிறது. அப்படியென்றால் அதானிக்கு தொலைத் தொடர்பில் என்ன கட்டமைப்பு இருக்கிறது. எதன் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது?

தனியார் நிறுவனங்கள் எல்லாம் 4ஜி, 5ஜி தொழில்நுட்பத்திற்குத் தேவையான உபகரணங்களை வெளிநாடுகளிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். ஆனால் பி.எஸ்.என்.எல்-க்கு மட்டும் மோடி அரசு ஏன் தடை விதிக்க வேண்டும்?

“5G அலைக்கற்றை ஒதுக்கீடு - காவி கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கு உதவி செய்த மோடி அரசு”: தீக்கதிர் ஏடு விளாசல்!

ராணுவம், அணுசக்தித்துறை, நீதித்துறை, உளவுத்துறை உள்ளிட்ட தேசத்தின் அதிமுக்கிய துறைகள் கூட இனி 5ஜி அலைக்கற்றைக்குத் தனியாரிடம்தான் கையேந்த வேண்டும். இன்று இணையம் என்பது தொழில்துறையினருக்கு மட்டுமல்ல, அன்றாட வாழ்க்கைக்கும் மின்சாரத்தைப் போன்று முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. அதனை மோடி அரசு தனது காவி கார்ப்பரேட் கூட்டாளிக்கு முற்றாக தாரை வார்த்திருக்கிறது.

ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்கும் திட்டம் இது.

* தனியாருக்கு 5ஜி அலைக்கற்றையைத் திசைதிருப்பி விட்டதன் மூலம், பொதுத் துறையான பி.எஸ்.என்.எல்.க்கு சாவு மணி அடிப்பது.

* 5ஜி ஊழல் பணத்தைத் தேர்தல் பத்திரம் மூலம் கட்சிக்கு நன்கொடையாகப் பெறுவது.

* அதானி, அம்பானி உள்ளிட்ட தனியார் நிறுவன நெட் ஒர்க்கை பயன்படுத்தி தேசம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் கோட்பாட்டை வலிந்து திணிப்பது.

இந்த தேசத் துரோகத்தை முறியடிக்க 75 ஆவது சுதந்திர தினத்தில் மீண்டும் ஒரு சுதந்திரப் போருக்கு நாம் தயாராக வேண்டும்.

banner

Related Stories

Related Stories