தமிழ்நாடு

ஏ.சி வெடித்து தீயில் கருகிய இளைஞர் .. திருமணமாகி 6 மாதத்தில் நடந்த சோகம் !

திருமணம் ஆகி வெறும் ஆறே மாதங்கள் ஆன நிலையில் புது மாப்பிள்ளை ஏ.சி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.சி வெடித்து தீயில் கருகிய இளைஞர் .. திருமணமாகி 6 மாதத்தில் நடந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை, பெரம்பூர் பகுதியில் வசித்து வந்தவர் ஷ்யாம். அந்த பகுதியில் பால் வியாபாரம் செய்து வரும் இவருக்கும், சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த தனலட்சுமி என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணமானது.

ஏ.சி வெடித்து தீயில் கருகிய இளைஞர் .. திருமணமாகி 6 மாதத்தில் நடந்த சோகம் !

இந்த நிலையில், இது ஆடி மாதம் என்பதால், இவரது மனைவி தனது தாயார் வெற்றிக்கு செல்ல, இவர் அவரது பெற்றோர்களுடன் வீட்டில் இருந்துள்ளார். சம்பவம் நடந்த நாளன்று, வேலை முடித்து விட்டு வந்த ஷியாம் வீட்டில் உள்ள தனது அறையில் ஏ.சி காற்றில் நன்றாக உறங்கி கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது அவரது அறையில் இருந்த ஏ.சி திடீரென வெடித்து தீப்பிடித்துள்ளது. மேலும் இந்த ஏ.சி அவர் படுக்கைக்கு அருகே இருந்ததால், இது வெடித்து அவர் மீது சிதறி தீப்பற்றியுள்ளது. இதில் அலறித்துடித்த ஷ்யாம், சம்பவ இடத்திலே கருகியுள்ளார்.

ஏ.சி வெடித்து தீயில் கருகிய இளைஞர் .. திருமணமாகி 6 மாதத்தில் நடந்த சோகம் !

ஷ்யாமின் அலறல் சத்தம் கேட்டு அவரது அறைக்கு தந்தை ஓடி வந்து பார்க்கும்போது, ஷ்யாம் உடல் கருகி இறந்து கிடந்துள்ளார். இதனைக்கண்ட அவரது தந்தை கதறி அழுதுள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

ஏ.சி வெடித்து தீயில் கருகிய இளைஞர் .. திருமணமாகி 6 மாதத்தில் நடந்த சோகம் !

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் அதிகாரிகள், ஷ்யாமின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரகின்றனர். திருமணம் ஆகி வெறும் ஆறே மாதங்கள் ஆன நிலையில் புது மாப்பிள்ளை ஏ.சி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories