தமிழ்நாடு

63 நாணயங்களை சாப்பிட்ட இளைஞர்.. நாணயங்களை சாப்பிட்ட காரணத்தை கேட்டு அதிர்ந்த மருத்துவர்கள் !

மன உளைச்சல் காரணமாக 63 நாணயங்களை சாப்பிட்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

63 நாணயங்களை சாப்பிட்ட இளைஞர்.. நாணயங்களை சாப்பிட்ட காரணத்தை கேட்டு அதிர்ந்த மருத்துவர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய இளைஞர் ஒருவர், கடுமையான வயிற்றுவலி காரணமாக அங்கிருக்கும் மருத்துவமனையை அணுகியுள்ளார். அப்போது வரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு X-Ray செய்துள்ளனர்.

X-Ray ரிப்போர்ட் வினோதமாக இருந்ததால், அவரிடம் இது குறித்து கேட்டனர். அப்போது தான் மன அழுத்தத்தில் இருந்தபோது சில நாணயங்களை விழுங்கியதாக தெரிவித்தார். இதைகேட்டு அதிர்ந்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்தனர்.

63 நாணயங்களை சாப்பிட்ட இளைஞர்.. நாணயங்களை சாப்பிட்ட காரணத்தை கேட்டு அதிர்ந்த மருத்துவர்கள் !

எண்டோஸ்கோப்பி என்று சொல்லப்படும் சிகிச்சை மூலமாக அவர் வயிற்றில் இருந்த நாணயங்களை அகற்றினர். சுமார் 2 நாட்களாக நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையில், அவரது வயிற்றி இருந்து 63 நாணயங்கள் அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட அனைத்து நாணயங்களும் 1 ரூபாய் நாணயங்கள் ஆகும்.

63 நாணயங்களை சாப்பிட்ட இளைஞர்.. நாணயங்களை சாப்பிட்ட காரணத்தை கேட்டு அதிர்ந்த மருத்துவர்கள் !

இந்த சம்பவம் குறித்து மருத்துவ நிர்வாகம் கூறுகையில், "வயிற்றுவலி என்று சொல்லி எங்கள் மருத்துவமனைக்கு வந்த வாலிபர், மன உளைச்சல் காரணமாக நாணயங்களை விழுங்கியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அனைத்து நாணயங்களையும் அகற்றப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.

இப்படி மன உளைச்சல் காரணமாக இது போன்று உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய செயல்களை செய்பவர்கள் நல்ல மனநல ஆலோசகரை அணுக வேண்டும்" என்றனர்.

banner

Related Stories

Related Stories