தமிழ்நாடு

தயாரித்த படத்தை வெளியிட திருடனாக மாறிய வில்லன் நடிகர்.. போலிஸாரை அதிரவைத்த வாக்குமூலம்!

சொந்தமாகப் படம் எடுப்பதற்காகக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த வில்லன் நடிகரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

தயாரித்த படத்தை வெளியிட திருடனாக மாறிய வில்லன் நடிகர்.. போலிஸாரை அதிரவைத்த வாக்குமூலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை பூக்கடை காவல் நிலையம் அருகே உள்ள ஒரு ஜவுளி கடையில் ரூ 5 லட்சம் மற்றொரு கடையில் ரூ. 1.5 லட்சம் என அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளை சம்பவம் நடந்த இடத்திலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

தயாரித்த படத்தை வெளியிட திருடனாக மாறிய வில்லன் நடிகர்.. போலிஸாரை அதிரவைத்த வாக்குமூலம்!

அதில், ஆட்டோவில் வந்து இறங்கி மர்ம நபர் ஒருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் நடந்து சென்றது பதிவாகியுள்ளது. இதையடுத்து அந்த நபர் குறித்து போலிஸார் விசாரணை துவக்கியுள்ளனர். பின்னர், திருவல்லிக்கேணியில் ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்கி வந்த ஆனந்த் என்றும் இவர் பெங்களூருவரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் இவர்தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஆனந்திடமிருந்து மூன்று செல்போன்கள் ,4 லட்சம் ரொக்கம், கார், திருட்டு தொழிலுக்குத் தேவையான இரும்பு உபகரணங்கள், முகமூடி, கையுறை, தொப்பி ஆகியவற்றை போலிஸார் பறிமுதல் செய்தனர்

தயாரித்த படத்தை வெளியிட திருடனாக மாறிய வில்லன் நடிகர்.. போலிஸாரை அதிரவைத்த வாக்குமூலம்!

மேலும் கடந்த 10 ஆண்டுகளாக திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஆனந்த் மீது கர்நாடகாவில் மட்டும் 20 க்கும் மேற்பட்ட வழக்குள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சென்னை வந்து கைவரிசை காட்டும்போது ஆனந்த் சிக்கியுள்ளார். திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் உள்ளனர்.

மேலும் அவர் தானே தயாரித்த ஒரு படத்தில் வில்லனாக நடித்துள்ளார். பொருளாதார பிரச்சனையால் அந்த படம் பாதியிலேயே நின்றுள்ளது. இதனால் இந்த படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக போலிஸாரிடம் ஆனந்த் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories