இந்தியா

மனைவி செயலால் அதிர்ச்சியடைந்த கணவன்.. காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்: நடந்தது என்ன?

உத்தர பிரதேசத்தில் 6 வயது பெண் குழந்தை மீது பெண் ஒருவர் கொதிக்கும் எண்ணை ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி செயலால் அதிர்ச்சியடைந்த கணவன்.. காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்: நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம் லக்னோ நகரத்தைச் சேர்ந்தவர் அஜய்குமார். இவரது மனைவி பூனம். இந்த தம்பதிக்குத் திருமணமானதில் இருந்து குழந்தை இல்லை. இதனால் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கலாமா என மனைவியுடன் அஜய்குமார் ஆலோசனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அஜய்குமார் தத்தெடுத்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். கணவனின் அந்த செயல் பூனமிற்கு பிடிக்கவில்லை. இதனால் வீட்டிற்கு அழைத்து வந்த குழந்தை மீது தொடர்ந்த வெறுப்பைக் காட்டிவந்துள்ளார்.

மனைவி செயலால் அதிர்ச்சியடைந்த கணவன்.. காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்: நடந்தது என்ன?

இதையடுத்து சம்பவத்தன்று பூனம் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணையை எடுத்து குழந்தையின் அந்தரங்க உறுப்பில் ஊற்றியுள்ளார்.

பின்னர் அலறல் சத்தம் கேட்டு வந்த அஜய்குமார் குழந்தையின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு உடனே குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மனைவி செயலால் அதிர்ச்சியடைந்த கணவன்.. காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்: நடந்தது என்ன?

இதையடுத்து மனைவி மீது அஜய்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்த பூனத்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories