தமிழ்நாடு

“ஹலோ யாராவது இருக்கீங்களா?” - ஒய்யாரமாய் நடந்து வந்து வீட்டின் கதவை தட்டிய கரடி.. அதிர்ந்துப்போன மக்கள்!

கரடி ஒன்று குடியிருப்பு வீட்டின் கதவை தட்டும் வீடியோ அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

“ஹலோ யாராவது இருக்கீங்களா?” - ஒய்யாரமாய் நடந்து வந்து வீட்டின் கதவை தட்டிய கரடி.. அதிர்ந்துப்போன மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர் மற்றும் கூடலூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக யானை ,கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில் நேற்று இரவு உதகை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கூட்ஸ் ஷெட் பகுதியில் தொடர்ந்து நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அச்சம் அடைந்தனர். வெளியே வந்து பார்த்த அப்பகுதி மக்கள் கரடி வீடுகளின் கதவை தட்டி உணவு தேடியதை பார்த்து அச்சமடைந்தனர்.

பின்னர் சத்தமிட்டதும் கரடி அருகில் இருந்த புதர் பகுதியில் சென்று மறைந்துள்ளது. பின்னர் காலை சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அந்த வழியாக ஒய்யாரமாக நடந்து வந்த கரடி வீதிகளில் இரண்டு முறை நடந்து தெருக்களை வட்டமிட்டு பின் அந்த பகுதியில் கதவுகளை தட்டும் காட்சி பதிவாகியுள்ளது.

இதனால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உதகை நகரில் மீண்டும் கரடி உலா வந்தது பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories