வைரல்

“மோசம் போய்ட்டோம் யா..” நாம் சிறுவயதில் இருந்தே பின்பற்றியது தவறா? - உண்மை என்ன? : வீடியோ இதோ!

சிறுவயதில் இருந்து நாம் 'JUICE STICK ' -ஐ பயன்படுத்துவது தவறு என்று புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவிவரும் நிலையில் அது குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

“மோசம் போய்ட்டோம் யா..” நாம் சிறுவயதில் இருந்தே பின்பற்றியது  தவறா? - உண்மை என்ன? : வீடியோ இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இணையத்தில் வார வாரம் எதையாவது ஒன்றை இணையவாசிகள் ட்ரெண்ட் செய்து கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் கடந்த சில நாட்களாக 'JUICE STICK ' -ஐ நாம் இத்தனை நாள் பயன்படுத்தியது தவறு எனவும், அதை சரியான முறையில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பாகவும் ஒரு புகைப்படம் பலரால் பகிரப்பட்டது.

இதைப் பார்த்த பலரும் நாம் சிறுவயதில் இருந்து 'JUICE STICK ' -ஐ தவறாகதான் பயன்படுத்தி வருகிறோம் எனக் கருதி அதை சோதனை செய்யாமலே நண்பர்களுக்கு அனுப்பியும் status வைத்தும் இணையத்தை தெறிக்கவிட்டனர்.

“மோசம் போய்ட்டோம் யா..” நாம் சிறுவயதில் இருந்தே பின்பற்றியது  தவறா? - உண்மை என்ன? : வீடியோ இதோ!

இந்த நிலையில் அந்த புகைப்படத்தில் இருப்பதைப் போல பரிசோதனை செய்து இணையத்தில் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் 'JUICE STICK '-ஐ இணையத்தில் வைரலான புகைப்படத்தில் இருப்பதைப் போல தலைகீழாக ஜூஸ் கவர் உள்ளே செலுத்தியுள்ளார். ஆனால் அந்த JUICE STICK முழுவதுமாக ஜூஸ் கவர் உள்ளே சென்றுள்ளது.

இதன் மூலம் இணையத்தில் அதிவேகமாக பரவிய அந்த புகைப்படத்தில் இருக்கும் தகவல் தவறானது என்பதும், நாம் சிறிய வயதில் இருந்தே 'JUICE STICK '-ஐ சரியாகத்தான் பயன்படுத்தி வருகிறோம் என்பதும் தெரியவருகிறது. அதோடு இதன் காரணமாக இணையத்தில் வரும் அனைத்தையும் உண்மை என நம்பக்கூடாது என்பதும் தெரியவருகிறது.

banner

Related Stories

Related Stories