தமிழ்நாடு

“முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அல்டிமேட்.. OPS - EPS துரோகத்தின் அடையாளம்” : வைரலாகும் பொதுமக்கள் பேட்டி!

“அ.தி.மு.க.வில் இப்போ ஒரு பிரச்சினை போய்க்கிட்டு இருக்கு, அதில் உங்களுடைய கருத்து என்ன? ஓ.பி.எஸ்.சா? இ.பி.எஸ்.சா?” என்ற கேள்வி எழுப்பியதற்கு பொதுமக்களின் கருத்து வைரலாகி வருகிறது.

EPS & OPS
ANI EPS & OPS
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இணையதள தொலைக்காட்சி செய்தியாளர் பொதுமக்களிடம், “அ.தி.மு.க.வில் இப்போ ஒரு பிரச்சினை போய்க்கிட்டு இருக்கு, அதில் உங்களுடைய கருத்து என்ன? ஓ.பி.எஸ்.சா? இ.பி.எஸ்.சா?” என்ற கேள்வி எழுப்பியதற்கு பொதுமக்களின் கருத்து வருமாறு:-

நடுத்தர வயதுப் பெண்:

1) இரண்டு பேருமே கிடையாது. ஏன்னா ரெண்டு பேருமே ஆட்சி முடிஞ்சு யாருக்குமே எதுவுமே செய்யவில்லை. இப்போ தலைவர் வந்து இருக்கார், எல்லோருக்கும், ஏழைகளுக்கு உதவி செய்துக் கிட்டு வராங்க!

வயதானபெண்:

1) எந்த ஆட்சியும் எங்களுக்கு வேணாம், எங்களுக்கு தளபதி இருந்தால் போதும், அவர்தான் நல்லது செய்கிறார். இந்த 5 ஆண்டும் அவர் இருக் கணும், அடுத்த 5 ஆண்டும் அவர் இருக்கணும், அதற்காக எனது வாழ்த்துகள்!

நடுத்தர வயதுப் பெண்:

2) எனக்கு ஓ.பி.எஸ்.சும் வேணாம், இ.பி.எஸ்.சும் வேணாம். கலைஞர் ஆட்சி இருந்தா மட்டும் போதும். பத்து வருஷமா எங்களுக்கு ஒண்ணுமே பண்ணலே, இப்போ ஸ்டாலின் வந்துதான் எங்களுக்கு எல்லாமே செய்கிறார். அவர் ஆட்சிதான், அடுத்த ஆட்சியும், அவர் ஆட்சி தான்,

நடுத்தர வயது ஆண்:1)

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அதைப்பற்றி யெல்லாம் இப்போ பிரச்சினையே இல்லைங்க. இன்றைக்கு அருமையான ஒரு ஆட்சி நடந்துக்கிட்டு இருக்கு. ஓ.பி.எஸ்.. இ.பி.எஸ். இவங்க துரோகத்தின் அடையாளம்.

மூதாட்டி:

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.ன்னா எனக்கு யாருன்னு தெரியாது. ஆனா இந்த ஆட்சி நல்ல ஆட்சி! அவ்வளவு தான் எங்களுக்குத் தெரியும்.

நடுத்தர வயது ஆண்:

2) ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். வேண்டாம். உதயநிதி ஸ்டாலின் தான், ஸ்டாலின் தான் வேணும்! அவர்தான் இப்போ மெயின். இவ்வாறு பொதுமக்கள் தங்களின் கருத்துகளைத் தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories