தமிழ்நாடு

எங்கள் ஊர்; எங்கள் பெருமை விருது விழா: திண்டுக்கல்லுக்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்!

நமது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் சார்பில் “எங்கள் ஊர்; எங்கள் பெருமை” என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடைபெற்றது.

எங்கள் ஊர்; எங்கள் பெருமை விருது விழா: திண்டுக்கல்லுக்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நமது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி சார்பில் “எங்கள் ஊர்; எங்கள் பெருமை” என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியை தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடத்தத் திட்டமிட்டு, திருப்பூர், திருநெல்வேலி, சேலம் ஆகிய நகரங்களில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து 4-வது முறையாக நமது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி சார்பில், “எங்கள் ஊர்; எங்கள் பெருமை’’ விருது வழங்கும் நிகழ்ச்சி, திண்டுக்கல்லில் நடைபெற்றது.

கடந்த 11ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் ரேடிசன் பார்சன்ஸ் கோர்ட் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பலரும் கலந்துகொண்டனர். மேலும், திண்டுக்கல்லுக்கு பல்வேறு வகையில் புகழ் தேடித்தருவோரை கவுரவிக்கும் வகையில் பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

1.சிறந்த வரலாற்று ஆய்வாளர் விருது!

சிறந்த வரலாற்று ஆய்வாளர் விருது ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் அவர்களுக்கு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முனைவர் எஸ்.விசாகன் விருது வழங்கினார்.

எங்கள் ஊர்; எங்கள் பெருமை விருது விழா: திண்டுக்கல்லுக்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்!

2.சிறந்த மலர் ஏற்றுமதியாளர் விருது!

நிலக்கோட்டை முருகேசன் அவர்களுக்கு, சிறந்த மலர் ஏற்றுமதியாளர் விருதினை திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் வழங்கி கவுரவித்தார்.

எங்கள் ஊர்; எங்கள் பெருமை விருது விழா: திண்டுக்கல்லுக்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்!

3.புதுமை மற்றும் நவீனத் தொழில்நுட்பம்!

'நாகா Foods' நிறுவனத்திற்கு, புதுமை மற்றும் நவீனத் தொழில்நுட்பம் விருதினை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் வழங்கினார்கள்.

எங்கள் ஊர்; எங்கள் பெருமை விருது விழா: திண்டுக்கல்லுக்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்!

4.சிறந்த உணவுப்பொருள் நிறுவனம்!

'அணில் Foods' நிறுவனத்திற்கு, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி விருது வழங்கி கவுரவித்தார்.

எங்கள் ஊர்; எங்கள் பெருமை விருது விழா: திண்டுக்கல்லுக்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்!

5.சிறந்த திரைப்பட இயக்குநர் !

இயக்குநர் சுசீந்திரன் அவர்களுக்கு, உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி விருது வழங்கி கவுரவித்தார்.

எங்கள் ஊர்; எங்கள் பெருமை விருது விழா: திண்டுக்கல்லுக்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்!

6.சிறந்த சமூக அமைப்பு!

ஆயக்குடி மக்கள் மன்றத்திற்கு பழனி எம்.எல்.ஏ. ஐ.பி.செந்தில்குமார் மற்றும் பார்வதி குழும நிர்வாக இயக்குநர் பிரவீன்குமார் ஆகியோர் விருது வழங்கி கவுரவித்தனர்.

எங்கள் ஊர்; எங்கள் பெருமை விருது விழா: திண்டுக்கல்லுக்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்!

7.சிறந்த கவிஞர் - எழுத்தாளர் !

எழுத்தாளர் யவனிகா ஶ்ரீராம் அவர்களுக்கு, திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் வே.லதா விருது வழங்கி கவுரவித்தார்.

எங்கள் ஊர்; எங்கள் பெருமை விருது விழா: திண்டுக்கல்லுக்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்!

8.சிறந்த வீராங்கனை!

வீராங்கனை ஆர்.சவுந்தர்யா அவர்களுக்கு, உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி விருது வழங்கி கவுரவித்தார்.

எங்கள் ஊர்; எங்கள் பெருமை விருது விழா: திண்டுக்கல்லுக்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்!

9.சிறந்த தொழில் நிறுவனம்!

Bella Premier Happy Hygiene Care India Pvt.Ltd நிறுவனத்திற்கு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முனைவர் எஸ்.விசாகன் விருது வழங்கி கவுரவித்தார்.

எங்கள் ஊர்; எங்கள் பெருமை விருது விழா: திண்டுக்கல்லுக்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்!

10.சிறந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி!

PSNA பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிக்கு பழனி எம்.எல்.ஏ. ஐ.பி.செந்தில்குமார் விருது வழங்கி கவுரவித்தார்.

எங்கள் ஊர்; எங்கள் பெருமை விருது விழா: திண்டுக்கல்லுக்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்!

11.சிறந்த கால்பந்தாட்ட வீரர்!

கால்பந்தாட்ட வீரர் ரொமாரியோ அவர்களுக்கு, உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி விருது வழங்கி கவுரவித்தார்.

எங்கள் ஊர்; எங்கள் பெருமை விருது விழா: திண்டுக்கல்லுக்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்!

12. சிறந்த தெய்வீக பொருட்கள் தயாரிப்பு நிறுவனம்!

சிறந்த தெய்வீக பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் 'சித்தனாதன் பஞ்சாமிர்தம்' நிறுவனத்திற்கு, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி விருது வழங்கி கவுரவித்தார்.

எங்கள் ஊர்; எங்கள் பெருமை விருது விழா: திண்டுக்கல்லுக்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்!
banner

Related Stories

Related Stories