தமிழ்நாடு

அடுப்பில் கொதித்த ரசத்தை எடுத்து கணவர் மீது ஊற்றிய மனைவி.. வெந்த முகத்தோடு கணவர் செய்த பகீர் சம்பவம்!

விழுப்புரத்தில், அடித்து கொடுமைப் படுத்தி வந்த கணவன் மீது கொதிக்கும் ரசத்தை மனைவி ஊற்றிய சம்பவம் நடந்துள்ளது.

அடுப்பில் கொதித்த ரசத்தை எடுத்து கணவர் மீது ஊற்றிய மனைவி.. வெந்த முகத்தோடு கணவர் செய்த பகீர் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விழுப்புரம் மாவட்டம், ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி குப்பம்மாள். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையான நடராஜன் தினமும் மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் தம்பதிக்குள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதற்கிடையில், கணவன் கொடுமை தாங்க முடியாமல் குப்பம்மாள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்போது போலிஸார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து நடராஜன், மனைவியை அடித்து சித்தரவதை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நடராஜன் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி குப்பம்மாள் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த ரசத்தை எடுத்து கணவன் முகத்தில் ஊற்றியுள்ளார். பிறகு வந்த முகத்தோடு மனைவி மீது புகார் கொடுக்க நடராஜன் காவல்நிலையம் சென்றார்.

அப்போது காவலர்கள் நடராஜனை முதலில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது ஆம்புலன்ஸில் செல்ல மறுத்து ரகளையில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது.

இதையடுத்து போலிஸார் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடித்து கொடுமைப் படுத்தி வந்த கணவன் மீது கொதிக்கும் ரசத்தை மனைவி ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories