அரசியல்

“கழக இளைஞர்களை அச்சுறுத்தலாம் என நினைத்தால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை!

GenZ DMK கூட்டங்களை ஒருங்கிணைத்து வரும் அன்பானந்தன் அரியப்பனை நள்ளிரவில் கைது செய்ய காவல்துறை முயற்சித்ததற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“கழக இளைஞர்களை அச்சுறுத்தலாம் என நினைத்தால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

தமிழ்நாடு முழுவதும் GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்து திராவிட இயக்க கொள்கைகளை பரப்பி, அரசியல்படுத்தும் கூட்டங்களை இளைஞர்கள் தாமாக முன்வந்து நடத்தி வருகின்றனர்.

இதில் அன்பானந்தன் அரியப்பன் என்ற இளைஞரை கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் டிஎஸ்பி ஆனந்தராஜ் தலைமையில், காவல் ஆய்வாளர் சசிகலா உள்ளிட்ட 10க்கும் மேற்ப்பட்ட போலீசார் நள்ளிரவு 12.30 மணியளவில் அவரை கைது செய்யச் சென்றுள்ளனர்.

ஆளும் தவெக அரசு குறித்து விமர்சித்தால் காவல்துறையை ஏவுவது, அதே ஆளும் கட்சியினர் தவறு செய்தால் வாய் மூடி மௌனமாக இருப்பது முதலமைச்சர் விஜய்க்கு வாடிக்கையாகி விட்டது.

இதே வேகத்தில், எதிர்க்கட்சிகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் குறித்து தவறாக விமர்சித்து பதிவிடும் த.வெ.க-வினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி ஆட்சியையும் பிடித்துள்ள சோபா மாடல் அரசு, சட்டமன்றத்திலும் மாண்பைக் குறைத்து தவறாக நடந்து கொள்ளும் சினிமா முதலமைச்சரை வைத்துக்கொண்டு இவர்களிடம் மாண்பை எதிர்பார்ப்பதும் தவறுதான்.

“கழக இளைஞர்களை அச்சுறுத்தலாம் என நினைத்தால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை!

இந்நிலையில் காவல்துறையின் இந்த அராஜகப் போக்கை கண்டித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கழகத்தின் GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.

இதே போல சமீபத்தில், Gen Z கூட்டத்தில் பேசிய கனி எனும் தம்பி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தம்பி கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தம்பி கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்தது.

கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் - அரசையும் எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது… இது தான் மாற்றமா?

நிர்வாகத்திறனற்ற Sofa Model அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையில் எடுத்து இருக்கிறார்கள்.

கழக இளைஞர்களை காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories