தமிழ்நாடு

10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. லாரி ஓட்டுநர் போக்சோவில் சிறையில் அடைப்பு: போலிஸ் எடுத்த அதிரடி !

புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி ஓட்டுநரை போலிசார் கைது செய்தனர்.

10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. லாரி ஓட்டுநர் போக்சோவில் சிறையில் அடைப்பு: போலிஸ் எடுத்த அதிரடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி கடந்த சில நாடகளாகவே மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் விசாரித்ததில், அவருக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லைக் கொடுப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மாணவியின் மங்கலம் காவல்நிலையத்தில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலிசார், செல்லஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் பூவரசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், 18 வயதுக்கு கீழுள்ள சிறுமிகளிடம் பேச முயற்சிப்பது, புகைப்படங்கள் எடுப்பது, காதல் செய்வது, பாலியல் தொல்லை கொடுப்பது உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் அவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும், ஆகவே இளைஞர்கள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories