தமிழ்நாடு

மசாஜ் சென்டரில் இளம்பெண்களை மிரட்டி பணம் மற்றும் நகை கொள்ளை.. 4 பேர் கைது : விசாரணையில் பகீர் தகவல்!

புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் இளம்பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற வழக்கில் தொடார்புடைய 4 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.

மசாஜ் சென்டரில் இளம்பெண்களை மிரட்டி பணம் மற்றும் நகை கொள்ளை.. 4 பேர் கைது : விசாரணையில் பகீர் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள சங்கரதாஸ் வீதியில் மசாஜ் சென்டர் ஒன்று இயங்கி வருகிறது. இதனிடையே கடந்த 6 ஆம் தேதியன்று மர்ம கும்பல் ஒன்று மசாஜ் சென்டருக்குள் புகுந்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து, அங்கு இருந்த பெண்ணின் கழுத்தி அணிந்து இருந்த ரூ.81 ஆயிரம் மதிபுள்ள அரை சவரன் தங்க நகை மற்றும் பணத்தை பறித்து சென்றனர்.

இது குறித்து மசாஜ் சென்டரின் உரிமையாளர் விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பெரியகடை போலிசார் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது பல்வேறு குற்ற சம்பவங்கள் மற்றும் கொலை வழக்குகளில் தொடர்புடைய ரெயின்போ நகரை சார்ந்த பிரபல ரவுடி சத்யா தலைமையிலான 7 பேர் கொண்ட கும்பல் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து தனிப்படை அமைத்து போலிசார் அந்த கும்பலை தேடி வந்த நிலையில், 4 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சத்யா உள்ளிட்ட 3 பேரை சிசிடிவி காட்சியை வெளியிட்ட தொடர்ந்து தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories