தமிழ்நாடு

எச்சரிக்கையை மீறி ஓடும் ரயிலில் ஏறி சாகசம் செய்த கல்லூரி மாணவர்கள்.. 19 வயது வாலிபர் தவறி விழுந்து பலி!

எச்சரிக்கையை மீறி ஓடும் ரயிலில் ஏறி சாகசம் செய்த கல்லூரி மாணவர்கள்.. 19 வயது வாலிபர் தவறி விழுந்து பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவள்ளூர் அருகே இரண்டு தினங்களுக்கு முன் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாநில கல்லூரி மாணவர் நீதிதேவன் (19) அதற்கு முன்னதாக சக நண்பர்கள் உடன் ஓடும் ரயிலில் சாகசம் செய்த பரபரப்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன்பாக மாநிலக் கல்லூரி மாணவர் நீதிதேவன் என்பவர் சென்னையிலிருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் வந்து கொண்டிருந்தபோது திருவள்ளூர் அருகே செவ்வாப்பேட்டை - வேப்பம்பட்டு இடையே ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

அதற்கு முன்பாக ரயிலில் சக நண்பர்களுடன் இணைந்து அவர் சாகசம் செய்த பழைய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து மாணவர்கள் பேருந்து ரயிலில் சாகசம் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸார் எச்சரித்திருந்ததை மீறியும் மாணவர்கள் இதுபோன்ற சாகசத்தை மேற்கொண்டு உயிரிழப்பது வேதனை அடையச் செய்துள்ளது.

banner

Related Stories

Related Stories