தமிழ்நாடு

சிறுமிகளின் ஆபாச படங்களை ஷேர் செய்த கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த கதி.. சென்னை போலிஸார் அதிரடி நடவடிக்கை!

சிறுமிகளின் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து ஷேர் செய்த இளைஞர் மீது போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.

சிறுமிகளின் ஆபாச படங்களை ஷேர் செய்த கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த கதி.. சென்னை போலிஸார் அதிரடி நடவடிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

18 வயதிற்குட்பட்ட சிறுமிகளின் ஆபாச படங்களை இணையதளங்கள் வாயிலாக பார்ப்பவர்கள் மற்றும் ஷேர் செய்பவர்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கைகளில் போலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சிறுமி ஆபாச படங்கள் பதிவிறக்கம் செய்ததாக தமிழ்நாட்டில் பல இளைஞர்களை போலிஸார் கைது செய்தனர்.

மேலும் ஆபாச படங்கள் பார்ப்பவர்களின் பட்டியலை பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான தேசிய மையம் தயார் செய்து இந்தியா முழுவதிலும் அந்தந்த காவல் மாவட்டத்திற்கு அனுப்பி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி சூளை பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவரான சந்தோஷ்குமார் (17), தனது செல்போனில் தடை செய்யப்பட்ட சிறுமிகளின் ஆபாச படத்தை பார்த்து தனது நண்பர் ஒருவருக்கு ஷேர் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான தேசிய மையம் வேப்பேரி அனைத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளது.

அதன் பேரில் வேப்பேரி அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கல்லூரி மாணவரான சந்தோஷ்குமார் (18) என்பவரை அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கடந்த 2019ஆம் ஆண்டு சந்தோஷ் குமாரின் படிப்பிற்காக அவரது தந்தையான சென்னை உயர் நீதிமன்ற கிளர்க் சுப்பிரமணியன் செல்போனை வாங்கி கொடுத்துள்ளது தெரியவந்தது. அந்த செல்போனை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட சிறுமிகளின் ஆபாச படங்களை பார்த்து வந்ததும், அந்த ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து அவரது நண்பர் குகனுக்கு இன்ஸ்டாகிராமில் அனுப்பியதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தலைமறைவாக உள்ள சந்தோஷ்குமாரை வேப்பேரி அனைத்து மகளிர் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories