இந்தியா

பிளாக் செய்ததால் மன உளைச்சல்.. காதலன் வீட்டில் தூக்கில் தொங்கிய காதலி.. ஓவர் பொசஸிவ்வால் நடந்த விபரீதம்!

தன்னை பிளாக் செய்ததை அறிந்த காதலி காதலனின் வீட்டுக்கே சென்று ஏன் பிளாக் செய்தாய் எனக் கேட்டு வாதம் செய்திருக்கிறார்.

பிளாக் செய்ததால் மன உளைச்சல்.. காதலன் வீட்டில் தூக்கில் தொங்கிய காதலி.. ஓவர் பொசஸிவ்வால் நடந்த விபரீதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வாட்ஸ் அப்பில் பிளாக் செய்ததால் காதலனின் வீட்டில் காதலில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்த சம்பவம் மும்பையில் அரங்கேறியிருக்கிறது.

உயிரிழந்த அப்பெண் பிரனாலி லோகரே (20) என தெரிய வந்துள்ளது. பிரனாலியும், 27 வயதான அவரது காதலனும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்திருக்கிறார்கள்.

கடந்த ஞாயிறன்று இரவு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இருவரும் திரும்பியிருக்கிறார்கள். அப்போது பிரனாலி காதலனின் வீட்டில் தங்க வேண்டும் என அவரிடம் வற்புறுத்தி கூறியுள்ளார்.

ஆனால் அந்த நபர் அதனை ஏற்காமல் வீட்டுக்கு செல் எனக் கூறி அனுப்பி வைத்திருக்கிறார். இதனால் அதிருப்தி அடைந்த பிரனாலி கிளம்பிய பிறகு காதலனுக்கு போன் செய்து மீண்டும் மீண்டும் கேட்டிருக்கிறார்.

ஆனால் அப்போது அந்த நபர் ஏற்கவில்லை. தொடர்ந்து போன் செய்து வந்ததால் வாட்ஸ் அப் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் பிரனாலியை அவர் பிளாக் செய்திருக்கிறார்.

இதனிடையே தொடர்ந்து காதலனை தொடர்பு கொண்டும் எடுக்காததால் தன்னை பிளாக் செய்ததை அறிந்த பிரனாலி காதலனின் வீட்டுக்கே சென்று ஏன் பிளாக் செய்தாய் எனக் கேட்டு வாதம் செய்திருக்கிறார்.

பிளாக் செய்ததால் மன உளைச்சல்.. காதலன் வீட்டில் தூக்கில் தொங்கிய காதலி.. ஓவர் பொசஸிவ்வால் நடந்த விபரீதம்!

இதனால் வேறு வழியின்றி தனது வீட்டில் தங்கிக்கொள்ளும்படி கூறிவிட்டு சிறிது நேரத்திற்கு பிறகு வெளியே சென்றுவிட்டு காலை வீடு திரும்பியிருக்கிறார்.

அப்போது பிரனாலி தனது துப்பட்டாவால் காதலனின் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருக்கிறார். அதனைக் கண்ட அந்த காதலன் அதிர்ச்சியடைந்து போரிவாலி போலிஸாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

இதனையடுத்து உடனே விரைந்த போலிஸார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துவிட்டு சம்பவ இடத்தில் கடிதம் ஏதும் இருக்கிறதா என்று சோதனையிட்டதில் ஏதும் சிக்கவில்லை என்றதும் பிரனாலி மற்றும் காதலனின் மொபைல் போனை பறிமுதல் செய்திருப்பதாக காவல் ஆய்வாளர் அனில் கதம் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்கொலை செய்துக்கொண்ட பெண் தனது காதலன் மீது அளவுகடந்த பொசஸிவ்வில் இருந்ததாகவும் இது அந்த காதலனுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் எரிச்சலை கொடுத்ததால் பிளாக் செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories