இந்தியா

மனைவிக்கு புடவை கட்டத் தெரியாததால் மன உளைச்சல்.. திருமணமான 6 மாதத்தில் கணவன் செய்த செயலால் பரபரப்பு!

இறப்பதற்கு முன்பு தற்கொலை கடிதம் ஒன்றினை எழுதி வைத்துவிட்டு அந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மனைவிக்கு புடவை கட்டத் தெரியாததால் மன உளைச்சல்.. திருமணமான 6 மாதத்தில் கணவன் செய்த செயலால் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கணவன் மனைவியிடையேயான சண்டைகள் நித்தமும் நடைபெறுவது வழக்கமாக கருதப்பட்டாலும், அண்மை நாட்களாக நாட்டில் நடைபெற்று வரும் கணவன் மனைவி இடையேயான விவகாரங்கள் தொடர்பான செய்திகள் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தி வருகிறது.

அதற்கு முக்கிய காரணமாக இருவருக்கும் இடையே சரியான புரிதல் இல்லை என்பதையே மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் முன்வைக்கும் முக்கியமான கருத்தாக இருக்கிறது.

இப்படி இருக்கையில் மனைவிக்கு புடவை கட்டத் தெரியாததால் கணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் நகரில் நடந்தேறியிருக்கிறது.

முகுந்த் நகரில் வசித்து வந்த அஜய் சமதன் சேபிள் என்ற 24 வயதே ஆன இளைஞனின் தூக்கில் தொங்கியபடி இருந்த உடலைதான் முகுந்த்வாடி போலிஸார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்.

இறப்பதற்கு முன்பு தற்கொலை கடிதம் ஒன்றினை எழுதி வைத்துவிட்டு அந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, கைப்பற்றப்பட்ட கடிதத்தில், தன்னுடைய மனைவிக்கு புடவை கட்டவும் தெரியவில்லை, சரியாக நடக்கவோ, பேசவோ தெரியவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து பேசிய முகுந்த்வாடி காவல்நிலைய அதிகாரி பிரம்ம கிரி, இந்த தற்கொலை குறித்து மேலும் விசாரணை நடத்த வழக்குப்பதிவு செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

முன்னதாக அஜய் சமதன் சேபிளுக்கு கடந்த ஆறு மாதம் முன்புதான் திருமணம் நடைபெற்றிருக்கிறது. அவரது மனைவி அஜய்யை விட 6 வயது இளயவராவார்.

banner

Related Stories

Related Stories