தமிழ்நாடு

#FactCheck : புதிய கல்விக்கொள்கை, இந்தி மொழி திணிப்பு குறித்து தவறாக சித்தரிக்கப்படும் அமைச்சர் பேச்சு!

தமிழ்நாட்டில் மாநில கல்விக் கொள்கையே பின்பற்றப்படும் என அமைச்சர் பொன்முடி பேசியதாக சமூகவலைதளத்தில் தவறாகச் செய்திகள் வைரலாகி வருகிறது.

#FactCheck : புதிய கல்விக்கொள்கை, இந்தி மொழி திணிப்பு குறித்து தவறாக சித்தரிக்கப்படும் அமைச்சர் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கையை தி.மு.க ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறது. எதிர்க் கட்சியாக இருந்தபோது கூட இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்தது. தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு கூட தமிழ்நாட்டில் மாநில கல்விக் கொள்கையே பின்பற்றப்படும் என தொடர்ந்து தி.மு.க அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கை பின்பற்றப்படும் என பேசியதாக தவரான செய்து சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. கோவை பாரதியார் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "கல்வியில் இந்தியாவில் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கின்றது.

கல்வியும், சுகாதாரமும் இரு கண்கள் என முதல்வர் கூறுவார். அதன்படி கல்வித்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இங்கு பட்டம் பெற்றவர்களில் பெண் பட்டதாரிகள் ஆண்களை விட அதிகம் உள்ளனர். பெண்கள் படிக்கவே கூடாது என்று சொன்ன காலம் உண்டு. இன்று பெண்களைப் படிக்க வைக்கின்றார்கள். இதுதான் திராவிட மாடல் . இது பெரியார் மண்.

நாங்கள் மொழிகளுக்கு எதிரானவர்கள் இல்லை. இந்தி மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல .இந்தி திணிப்பு வேண்டாம் என்பதையே ஆளுநரின் கவனத்திற்கு சொல்கிறோம். எந்த மொழியையும் கற்கத் தயாராக இருக்கின்றோம். அது மூன்றாவது மொழியாக மட்டுமே இருக்க வேண்டும்

புதிய கல்வியில் உள்ள நல்ல விஷயங்களைப் பின்பற்றத் தயாராக இருக்கின்றோம். ஆனால் நாங்கள் மாநில கல்வி கொள்கையைச் செயல்படுத்துவோம். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை உயர்த்தப்பட வேண்டும் என்பதற்குப் பல திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது" என தெரிவித்துள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கை பின்பற்றப்படும் என அமைச்சர் பொன்முடியின் பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories