தமிழ்நாடு

அந்தரங்க படங்களை வைத்து மிரட்டி 17 வயது சிறுமிக்கு வன்கொடுமை: R.A.புரம் இளைஞருக்கு நேர்ந்த கதி தெரியுமா?

ஆபாச படங்கள் செல்போனில் வைத்திருப்பதாக மிரட்டி பாலியல் உறவில் ஈடுபட்ட நபரை அடையாறு போலிஸார் கைது செய்துள்ளனர்.

அந்தரங்க படங்களை வைத்து மிரட்டி 17 வயது சிறுமிக்கு வன்கொடுமை: R.A.புரம் இளைஞருக்கு நேர்ந்த கதி  தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

17 வயது சிறுமியிடம் தன்னுடைய ஆபாச படங்கள் செல்போனில் வைத்திருப்பதாக மிரட்டி பாலியல் உறவில் ஈடுபட்ட நபரை அடையாறு போலிஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை அடையாறு காவல் மாவட்டத்தில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம், ஒரு நபர் செல்போனில் சிறுமியின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் வைத்துள்ளதாகவும், தன்னுடன் வெளியே வரவில்லை என்றால் அதை இணையதளத்தில் வெளியிடுவதாகவும் மிரட்டி சிறுமியை பலமுறை அழைத்துச் சென்று பாலியல் உறவில் ஈடுபட்டிருக்கிறார்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில், ஆகாஷ் என்பவரும் பாதிக்கப்பட்ட சிறுமியும் சுமார் 2 ஆண்டுகளாக சமூக வலைதளத்தில் நண்பர்களாக பழகி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் ஆகாஷ், சிறுமிக்கு போன் செய்து, உன்னுடைய ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் தனது செல்போனில் வைத்துள்ளதாகவும், என்னுடன் வெளியில் வந்தால் விட்டுவிடுவேன் என்றும், இல்லையேல் இணையதளத்தில் வெளிடுவேன் என மிரட்டி, கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில், சிறுமியை ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் உறவு கொண்டது தெரியவந்தது.

அதன்பேரில், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (23) சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட ஆகாஷ் விசாரணைக்குப் பின்னர், இன்று (29.04.2022) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

banner

Related Stories

Related Stories