தமிழ்நாடு

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. உடன் படித்த இளைஞர் செய்த கொடூரம் : 4 பேருக்கு காப்பு மாட்டிய போலிஸ்!

தஞ்சை அருகே இளம்பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. உடன் படித்த இளைஞர் செய்த கொடூரம் : 4 பேருக்கு காப்பு மாட்டிய போலிஸ்!
HP
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தஞ்சை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண், தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வழக்கம்போல பணியை முடித்து விட்டு, தனது சொந்த ஊருக்குச் செல்லும்போது, அந்தப் பெண்னுடன் படித்த மேட்டுப்பட்டியை சேர்ந்த கொடிஅரசன் என்ற இளைஞர், அவரை அழைத்துச் சென்று வீட்டில் விடுவதாக கூறியுள்ளார்.

அவரது பேச்சைக் கேட்டு அந்த பெண்ணும் இருசக்கர வாகனத்தில் ஏறியுள்ளார். ஆனால் வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல், கொடிஅரசன் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, தனது நண்பர்களுடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து அந்த பெண் யாரிடமும் தெரிவிக்காத நிலையில், நேற்றிரவு அந்தப் பெண்ணின் உறவினர் ஒருவருக்கு இந்த சம்பவம் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர், பெண்ணின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து உறவினர்கள் மற்றும் பெண்ணின் பெற்றோர் தஞ்சை வல்லம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தனர்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் விசாரணை நடத்தி, பெண் பெற்றோர் கொடுத்தப் புகாரின் பேரில், கொடிஅரசன், தமிழரசன், சுகுமாரன், கண்ணன் ஆகிய நான்கு பேரை கைது செய்து அவர்கள் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து போலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories