தமிழ்நாடு

“போஸ்ட் மேன் வேலையை மட்டும் பாருங்க ஆளுநரே..!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“மக்கள் மன்றத்தில் நீட் தீமைகளைத் தொடர்ந்து எடுத்துரைப்போம்! இந்தப் போராட்டத்தில் நிச்சயம் வெல்வோம்!” என தி.க சார்பில் நடைபெற்ற மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

“போஸ்ட் மேன் வேலையை மட்டும் பாருங்க ஆளுநரே..!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“ஆசிரியர் சொல்வதுபோல, ஆளுநர் POST MAN வேலை செய்தால் போதும்” என தி.க சார்பில் நடைபெற்ற மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

நீட் தேர்வு எதிர்ப்பு, தேசியக் கல்விக்‌கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு ஆகியவற்றை முன்னிறுத்தி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மேற்கொண்ட 21 நாட்கள் பிரச்சாரப் பெரும் பயண நிறைவு விழா சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஆளுநரிடம் நான் கேட்பது நீட் தேர்வு சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் இல்லை அவர் சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் வேலையைச் செய்தால் போதும். ஆசிரியர் சொல்வதுபோல POST MAN வேலை செய்தால் போதும்.

இந்தியாவிற்கே முன்மாதிரியான ஆட்சி திராவிட மாடல் ஆட்சி தான். திராவிட சிந்தனை இந்தியா முழுவதும் பரவுவது சிலருக்கு கசக்கிறது. திராவிட மாடல் என்று சொல்வது சிலருக்கு எரிச்சலாக உள்ளது. திராவிடர் கழகமும் தி.மு.கவும் சேர்ந்திருப்பது சிலருக்கு வெறுப்பைத் தருகிறது. கறுப்பையும் சிவப்பையும் யாராலும் எந்தக் கொம்பனாலும் பிரிக்க முடியாது.

“போஸ்ட் மேன் வேலையை மட்டும் பாருங்க ஆளுநரே..!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தமிழினத்தைக் கல்வி, வேலைவாய்ப்பு சம்த்துவத்தை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டு இருக்கிறோம். 2006-ஆம் ஆண்டு நுழைவுத்தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். ஜெயலலிதா கூட நீட் தேர்வை தமிழகத்தில் நுழைய விடவில்லை. ஆனால் 2017 இரட்டையர்கள் ஆட்சியில் தான் நீட் தேர்வை நிறைவேற்றினர். சுய நலத்திற்காக தமிழினத்திற்கு துரோகம் செய்தது இரட்டையர்கள் அரசு.

நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வுக்காக நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தேன். நீட் தேர்வுக்கு எதிராக 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். நானே நேரடியாக ஆளுநரை சந்தித்து குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்துள்ளேன். பிரதமரையும் நேரில் சென்று நீட் தேர்வை ரத்து செய்ய கேட்டுக் கொண்டுள்ளேன்.

“போஸ்ட் மேன் வேலையை மட்டும் பாருங்க ஆளுநரே..!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ஆளுநரிடம் நான் கேட்பது ஒப்புதல் இல்லை. அவர் சட்ட முன் வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் POST MAN வேலை செய்தால் போதும். இன்று பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்கலாம் என்று தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். இன்றும் பா.ஜ.கவும் அதிமுகவும் வெளிநடப்பு செய்துள்ளார்கள்.

இவர்கள் செய்யும் துரோகத்தை தமிழக மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள். மாநிலங்கள் இணைந்தால் தான் ஒன்றியம் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும், மக்களாட்சி நடைபெறும் நாடு தமிழ்நாடு என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும்” என உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories