தமிழ்நாடு

ஒருதலையாக காதலித்து சிறுமியிடம் அத்துமீறல்: தட்டிக்கேட்ட தந்தை மீது நாட்டுவெடி வீச்சு; வாலிபர் வெறி செயல்

பள்ளி மாணவியை ஒரு தலையாக காதலித்த சம்பவத்தில் பெற்றோர் தட்டி கேட்டதால் அவர்கள் மீது நாட்டு வெடி வீச முயற்சித்த வாலிபர் கைது!

ஒருதலையாக காதலித்து சிறுமியிடம் அத்துமீறல்: தட்டிக்கேட்ட தந்தை மீது நாட்டுவெடி வீச்சு; வாலிபர் வெறி செயல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெரம்பலூர் மாவட்டம் கவுள்பாளையம் கிராமத்தைச்சேர்ந்த தனபால் (24). இவர் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

அதே கிராமத்தில் 9ஆம் வகுப்பு படிக்கும் அதே ஊரைச் சேர்ந்த சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்த தனபால் அவரை கேலி கிண்டல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இது சம்பந்தமாக மகேஷின் தந்தை ஏழுமலை தனபாலின் பெரியப்பா செல்வத்திடம் கூறி ஒரு வாரம் முன்பு தனபாலை கண்டித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த புதனன்று (ஏப்.,20) இரவு மகேஷின் வீட்டின் அருகே தொடர்ந்து நடந்து போவதும் வருவதுமாக இருந்துள்ளார். இதனைப் பார்த்த ஏழுமலை தனபாலை குச்சியால் அடித்துள்ளார்.

ஒருதலையாக காதலித்து சிறுமியிடம் அத்துமீறல்: தட்டிக்கேட்ட தந்தை மீது நாட்டுவெடி வீச்சு; வாலிபர் வெறி செயல்

அதனை தொடர்ந்து ஏழுமலை மற்றும் அவரது அண்ணன் திருமலை ஆகியோர் தனபால் வீட்டிற்கு சென்று தட்டிக் கேட்டிருக்கிறார்கள். ஆத்திரமடைந்த தனபால் அப்போது வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடியை மேலே தூக்கி வீச முயற்சித்திருக்கிறார்.

அதனை பார்த்த தனபாலின் சகோதரர் நந்தக்குமார் என்பவர் தடுத்துள்ளார். இதனையடுத்து இந்த விவகாரம் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தகவல் அறிந்த போலிஸார் சம்பவ இடம் சென்று தனபாலை கைது செய்ததோடு அவரிடமிருந்த 23 நாட்டு வெடிகளையும் கைப்பற்றினர். தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிந்த பெரம்பலூர் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories