தமிழ்நாடு

“தங்கையின் கணவரை வெட்டிக் கொலை செய்ய முயற்சி - பட்டப்பகலில் நடந்த கொடூரம்” : வெளிவந்த அதிர்ச்சி காரணம்!

திருச்சி அருகே மனைவியை அபகரித்துவிட்டதாகக் கூறி தனது தங்கையின் கணவரை பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தங்கையின் கணவரை வெட்டிக் கொலை செய்ய முயற்சி - பட்டப்பகலில் நடந்த கொடூரம்” : வெளிவந்த அதிர்ச்சி காரணம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியைச் சோ்ந்தவா் சந்துரு. இவா் தன்னுடைய தங்கை விஜயலட்சுமியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

இவரது தங்கை விஜயலட்சுமி இறந்த நிலையில், சந்துருவின் மனைவியான சத்யா என்பவர் சிவகுமார் மீது ஆசைப்பட்டு தன்னுடைய ஒரு மகனுடன் சென்று சிவகுமாருடன் கடந்த 2 வருட காலமாக சேர்ந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சந்துரு தன்னுடைய மனைவியை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டதாக கூறி ஆத்திரத்தில் அவரை திருச்சி திருவானைக்காவல் பாலத்தில் பட்டப்பகலில் துரத்தி துரத்தி வெட்டியுள்ளார். இதில் பலத்த காயங்களுடன் சிவகுமார் உயிர் தப்பியுள்ளார் .

பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து அவர்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா். இதில், கொலை செய்ய முயன்ற சந்துரு மீது ஏற்கனவே திருச்சி கோட்டை காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது.

banner

Related Stories

Related Stories