தமிழ்நாடு

சுருண்டு கிடந்த மகளை கண்டு பரிதவித்துப்போன பெற்றோர்: முறைமாமனால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

13 வயது சிறுமியை தொடர்ந்து வன்புணர்வு செய்த முறைமாமன் உள்ளிட்ட 9 பேர் மீது குழந்தை திருமணம், போக்சோ, கடத்தல் என 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

சுருண்டு கிடந்த மகளை கண்டு பரிதவித்துப்போன பெற்றோர்: முறைமாமனால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருநெல்வேலி பாளையங்கோட்டையை அடுத்த நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்த சுப்பையா, கல்லத்தி தம்பதியின் 13 வயது மகள் பிரியதர்ஷினி.

அதே ஊரைச் சேர்ந்த மாமா மாடசாமி வீட்டிற்கு அடிக்கடி சிறுமி சென்று வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அப்போது மாடசாமியின் மகன் வடிவேலு பிரியதர்ஷினியிடம் ஆசை வார்த்தைக் கூறி தொல்லை கொடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக மாமா மாடசாமியிடமும் பாட்டியிடமும் சிறுமி கூற அதற்கு அவர்கள் முறைமாமன் தான் எதும் கவலைப்பட வேண்டாம் எனச் சொல்லி தட்டிக்கழித்திருக்கிறார்கள்.

இப்படி இருக்கையில் கடந்த மாதம் 30ம் தேதி மாடசாமியின் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார் சிறுமி பிரியதர்ஷினி. அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி சிறுமியிடம் வடிவேலு கட்டாயப்படுத்தி வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார்.

இது குறித்து மாமா மாடசாமியிடம் தெரிவித்தபோது சிறுமியின் பெற்றோருக்கு எந்த தகவலையும் தெரிவிக்காமல் மகன் வடிவேலுக்கும் பிரியதர்ஷினிக்கும் திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார்.

இதனையடுத்து சிறுமியிடம் பாலியல் ரீதியில் வடிவேலு தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனால் கடுமையான வயிற்றுவலியால் சிறுமி துடித்திருக்கிறார்.

இந்த நிலையில் அண்மையில் தாய் வீட்டுக்குச் சென்ற சிறுமி அங்கு மிகவும் உடல்நலிவுற்று சுருண்டு படுத்திருக்கிறார். இதனைக் கண்டு விசாரித்த தாய் கல்லத்தியிடம் சிறுமி, நடந்தவற்றை கூறியிருக்கிறார்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனுக்கும் கடிதம் மூலம் புகாரும் தெரிவித்துள்ளனர்.

அதன் பேரில் விசாரணையில் இறங்கிய அனைத்து மகளிர் போலிஸார், பாதிக்கப்பட்ட சிறுமியை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

மேலும் 13 வயதே ஆன சிறுமியை குழந்தை திருமணம் செய்து வன்கொடுமை செய்ததற்காக மாடசாமி, அவரது மகன் வடிவேலு மற்றும் உறவினர் என 9 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories