தமிழ்நாடு

மகளுடன் நெருக்கமாக இருந்து தாயிடம் தவறாக நடந்த வாலிபருக்கு காப்பு: பாபநாசம் பட பாணியில் பகீர் சம்பவம்!

பள்ளி மாணவியை ரகசியமாக திருமணம் செய்து, அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி மாணவியின் தாயை உல்லாசத்திற்கு அழைத்த இன்ஸ்டாகிராம் வாலிபர் கைது.

மகளுடன் நெருக்கமாக இருந்து தாயிடம் தவறாக நடந்த வாலிபருக்கு காப்பு: பாபநாசம் பட பாணியில் பகீர் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல் (20) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. கோகுல் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இறுதியாண்டு படித்து வருகிறார்.

இவர்கள் இருவரின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் போனில் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி கோகுல், தனது பெற்றோர் தனக்கு திருமணம் செய்து வைக்க வேறு இடத்தில் பெண் பார்த்து ஏற்பாடு செய்திருப்பதாக மாணவியிடம் போன் மூலம் கூறியுள்ளான்.

மகளுடன் நெருக்கமாக இருந்து தாயிடம் தவறாக நடந்த வாலிபருக்கு காப்பு: பாபநாசம் பட பாணியில் பகீர் சம்பவம்!

மேலும் தான் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருப்பதாகவும், தன்னை வந்து சந்திக்கும்படி மாணவியிடம் கூறி உள்ளான்.

அதன் அடிப்படையில் ஜனவரி 6ஆம் தேதி அந்த மாணவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் காதலனைத் தேடி அவன் தங்கிருந்த அறைக்கு மாணவி சென்றுள்ளார். அப்போது கோகுல் தான் வைத்திருந்த தாலியை கழுத்தில் கட்டி உள்ளான். இதனைத் தொடர்ந்து கோகுல் ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளான்.

இருவரும் உல்லாசமாக இருந்ததை கோகுல் தனது செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வைத்திருந்தான். இந்நிலையில் கோகுல் மாணவி இடையேயான காதல் விவகாரம், மாணவியின் தாய்க்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாணவியின் தாய் இருவரையும் கண்டித்துள்ளார்.

ஆனால் கோகுல் மாணவியின் தாயிடம் லாவகமாக பேசி தொடர்ந்து மாணவியிடம் பழகி வந்துள்ளான். இந்த நிலையில் திடீரென மாணவியின் தாய்க்கு கோகுல் போன் செய்து தனக்கு உடனடியாக 10,000 ரூபாய் பணம் வேண்டும் என்றும் தரவில்லை என்றால் மாணவியுடன் நெருக்கமாக இருக்கக்கூடிய போட்டோ மற்றும் வீடியோக்களை இணையத்தில் பரப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளான். மேலும் பணம் தராவிட்டாலும் பரவாயில்லை, தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று மாணவியின் தாயிடம் கோகுல் போனில் மிரட்டியுள்ளான்.

தன்னுடைய தாய் வயதில் உள்ள மாணவியின் தாயை உல்லாசத்திற்கு அழைத்த கோகுலின் செயலால் அதிர்ச்சி அடைந்த மாணவி தாய் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலிஸார் கோகுல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories