இந்தியா

கேரளாவில் ஒரு வருடமாக 17 வயது சிறுமியை சீரழித்த கயவர்கள்: வேலை தருவதாகக்கூறி வன்கொடுமை செய்த 6 பேர் கைது!

ஒரு வருடமாக 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆறு கேரள போலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கேரளாவில் ஒரு வருடமாக 17 வயது சிறுமியை சீரழித்த கயவர்கள்: வேலை தருவதாகக்கூறி வன்கொடுமை செய்த 6 பேர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி ஒரு வருடமாக 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆறு பேரை கேரளாவின் தொடுபுழா போலிஸார் கைது செய்திருக்கிறார்கள்.

அண்மையில் தீவிர வயிற்று வலி காரணமாக இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருக்கிறார் 17 வயதுடைய சிறுமி.

அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மருத்துவர்கள் தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

கேரளாவில் ஒரு வருடமாக 17 வயது சிறுமியை சீரழித்த கயவர்கள்: வேலை தருவதாகக்கூறி வன்கொடுமை செய்த 6 பேர் கைது!

பின்னர் அந்த அதிகாரிகள் சிறுமிக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கி எப்படி கருவுற்றார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் சிறுமி கூறிய தகவலால் திடுக்கிட்டு போயிருக்கிறார்கள்.

அதன்படி, சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியின் தந்தை பிரிந்து சென்றதால் அச்சிறுமியும், அவரது தாயார் மட்டுமே தனியாக வசித்து வருகிறார்கள். இதனால் குடும்பத்தை தாயாரையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என சிறுமி வேலைக்கு செல்ல முற்பட்டிருக்கிறார்.

இதனையறிந்த குமாரமங்கலத்தைச் சேர்ந்த பேபி ரகு என்ற நபர் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி சிறுமியை வெளியே அழைத்துச் சென்றிருக்கிறார். இதற்காக பணத்தை பெற்றுக் கொண்ட பேபி ரகு தொடுபுழாவைச் சேர்ந்த தங்கச்சனிடம் சிறுமியை அறிமுகப்படுத்தி அவர் வேலை தருவார் எனக் கூறியிருக்கிறார்.

இதையடுத்து முதலில் சிறுமியை பலாத்காரம் செய்தவர் தங்கச்சன். இது போன்று வேலை தருவதாச் சொல்லி பல்வேறு இடங்களில் சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு 15 பேர் சிறுமியை சீரழித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் சிறுமியின் வாக்குமூலத்தை அடுத்து தொடுபுழா தங்கச்சன், கூடிக்குளம் சாக்கோ, எடவெட்டி பினு, வெள்ளரம்குன்னு சஜீவ், ராமாபுரத்தைச் சேர்ந்த தங்கச்சன், பெரிந்தலமன்னா ஜான்சன் ஆகிய 6 பேரை போலிஸார் முதற்கட்டமாக கைது செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிந்திருக்கிறார்கள்.

மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய எஞ்சிய 9 பேரை தேடி வருவதாகவும் அதில் நால்வர் குறித்த தகவல் கிட்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories