இந்தியா

என் புருஷனுக்கும், உன் மனைவிக்கும் தெரிஞ்சுட்டா என்ன பண்றது?.. ரயில் முன் பாய்ந்து உயிரை விட்ட காதல் ஜோடி

காணமல் போன மனைவியை கண்டுபிடித்து தரச் சொல்லி போலிஸில் புகாரளித்த கணவனுக்கு கிடைத்த செய்தியால் அதிர்ச்சியில் ஆழ்ந்துப் போயிருக்கிறார்.

என் புருஷனுக்கும், உன் மனைவிக்கும் தெரிஞ்சுட்டா என்ன பண்றது?.. ரயில் முன் பாய்ந்து உயிரை விட்ட காதல் ஜோடி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஷிஜி (38), சிவதாசன் தம்பதி. கடந்த பிப்ரவரி 22ம் தேதி மனைவி ஷிஜியை காணவில்லை என சிவதாசன் காவல்துறையிடம் புகாரளித்திருக்கிறார்.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ஷிஜியை தேடி வந்த போலிஸாருக்கு கொயிலண்டி ரயில் நிலையம் அருகே பெண், ஆண் இருவரது சடலம் கிடப்பதாக தகவல் வந்திருக்கிறது.

உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்ததில் உயிரிழந்தது காணாமல் போனதாக அறியப்பட்ட சிவதாசனின் மனைவி ஷிஜி என தெரிய வந்தது. மேலும் ஷிஜியுடன் கூட இருந்த நபர் முச்சுக்குன்னுவைச் சேர்ந்த ரனிஷ் (34) என்பதும் தெரிய வந்தது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஷிஜிக்கும் ரனிஷுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததும், இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் எண்ணி வீட்டை விட்டு வெளியேறி கணவன் மனைவி போர்வையில் தனியாக குடும்பமே நடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இப்படி இருக்கையில், தங்களது வீட்டுக்கு தெரிந்து பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் அப்பக்குதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

banner

Related Stories

Related Stories