இந்தியா

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு 2 சிறார்களை கொன்ற இளைஞன் சரமாரியாக வெட்டிக்கொலை: புதுச்சேரி அருகே நடந்த பகீர்

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு இரண்டு சிறுவர்களை கொலை செய்த வழக்கில், ஜாமினில் வெளியே வந்த குற்றவாளி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை.

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு 2 சிறார்களை கொன்ற இளைஞன் சரமாரியாக வெட்டிக்கொலை: புதுச்சேரி அருகே நடந்த பகீர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு இரண்டு சிறுவர்களை கொலை செய்த வழக்கில், ஜாமினில் வெளியே வந்த குற்றவாளியை மரம் நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் புதுச்சேரி அருகே நடந்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தையே உலுக்கிய, 13 வயது சிறுவன் தேவன்ராஜ் என்பவனை கட்டாயப்படுத்தி, ஓரினச்சேர்க்கை செய்து கொன்று புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலிசார் விசாரணையில் மரக்காணம் அடுத்த நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த அபினேஷ் (22), தேவன்ராஜை கட்டாயப்படுத்தி, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு கொன்று புதைத்தது தெரியவந்தது. மேலும் அதே பகுதியை சேர்ந்த ரீனேஷ் (12) என்ற சிறுவனிடமும், அபினேஷ் ஓரினசேர்க்கையில் ஈடுபட்டு கொலை செய்து புதைத்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து அபினேஷை கைது செய்த போலிசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த அபினேஷ், கோட்டகுப்பம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார். மேலும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் அபினேஷ் மீது நிலுவையில் உள்ளது.

இப்படி இருக்கையில், நேற்று இரவு கோட்டக்குப்பம் மரைக்காயர் தோப்பு பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அபினேஷ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த கோட்டகுப்பம் போலிஸார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு சிறுவர்களை கொலை செய்த, அபினேஷ் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories