அரசியல்

“மேயர் பிரியா மீது அவதூறு.. Protocol-ஐ தெரிந்து கொள்ளுங்கள்.. MLA பல்லவிக்கு சபாநாயகர் கொடுத்த பதிலடி”

சென்னை மேயர் பிரியா ராஜன் மீது பள்ளிக்கட்டடம் திறப்பு தொடர்பாக அவதூறு பரப்ப முயன்ற எம்.எல்.ஏ பல்லவிக்கு சபாநாயகரே இன்று (ஜூன் 22) சட்டப்பேரவையில் விளக்கமளித்து பதிலடி கொடுத்துள்ளார்.

“மேயர் பிரியா மீது அவதூறு.. Protocol-ஐ தெரிந்து கொள்ளுங்கள்.. MLA பல்லவிக்கு சபாநாயகர் கொடுத்த பதிலடி”
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

சென்னை, புளியந்தோப்பு பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட நடுநிலைப்பள்ளி தொடக்க விழாவில் மேயர் பிரியா ராஜன் மற்றும் எம்.எல்.ஏ பல்லவி ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் மாநகராட்சி நிதியில் கட்டப்பட்டுள்ள கட்டடம் என்ற அடிப்படையில் மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் குத்துவிளக்கேற்றி நிகழ்வை தொடங்கி வைத்தார். அதுக்கடுத்த படியாக மாவட்ட ஆட்சியரிடம் விளக்கேற்ற மெழுகு வர்த்தியை வழங்கிய நிலையில் மிகவும் அநாகரிமாக நடந்து கொண்டார்.

இதுகுறித்து அப்போதே மேயர் பிரியா புரோட்டக்கால் என்ன என்பதனை எம்.எல்.ஏ பல்லவி தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இந்நிலையில் இதனை சர்ச்சையாக்கி மிகப்பெரிய பிரச்சனையாக ஊதிப் பெரிதாக்க தவெக-வினர் முயன்றனர்.

இதுகுறித்து இன்று (ஜூன் 22) சட்டப்பேரவையில் சபாநாயகர் விளக்கமளித்தார். இந்தச் சம்பவம் குறித்து பதிவிட்டுள்ள திமுக தகவல் தொழில்நுட்ப அணி,

மேயர் பிரியா அவர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட அப்பட்டமான அவதூறு நாடகம் சுக்குநூறாக உடைக்கப்பட்டது!

“மேயர் பிரியா மீது அவதூறு.. Protocol-ஐ தெரிந்து கொள்ளுங்கள்.. MLA பல்லவிக்கு சபாநாயகர் கொடுத்த பதிலடி”

மதிப்பிற்குரிய சென்னை மேயர் பிரியா ராஜன் அவர்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை சட்டமன்றத்தில் இன்று சபாநாயகர் ஜே.சி.டி பிராபகர் அவர்களே விளக்கியுள்ளார்.

திரு.வி.க நகர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், அரசு மரபுகளை (Warrant of Precedence and Protocol) மீறி நடந்துகொண்டது தவெக எம்.எல்.ஏ பல்லவி தானே தவிர, மேயர் பிரியா இல்லை என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

ஆனால், Protocol என்றால் என்னவென்றே அடிப்படை அறிவு இல்லாமல், ஒரு தலித் பெண் மேயர் என்ற வன்மத்தில் சமூக வலைதளங்களில் அவரைத் தரக்குறைவாக விமர்சித்த அந்த 'Virtual Abusers'களுக்கு சரியான சவுக்கடி கொடுத்துள்ளார் மாண்புமிகு சபாநாயகர்!

அரசு மரபுகள் பற்றி எந்த அறிவும் இல்லாமல் இணையத்தில் குரைத்துக் கொண்டிருந்த கூட்டத்திற்கு, பாடம் எடுத்த மாண்புமிகு சபாநாயகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

இனியாவது Warrant of Precedence என்றால் என்னவென்று படித்துத் தெரிந்துகொண்டு பேசுங்கள் இணையத்து அறிவுஜீவிகளே! எனத் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories