தமிழ்நாடு

தலைக்கேறிய லைக்ஸ் மோகம்.. செல்ஃபி எடுத்ததால் வந்த வினை : ரயிலில் அடிபட்டு 3 இளைஞர்கள் பரிதாப பலி !

செங்கல்பட்டு அருகே செல்பி மோகத்தால் விரைவு ரயிலில் அடிபட்டு மூன்று இளைஞர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைக்கேறிய லைக்ஸ் மோகம்.. செல்ஃபி எடுத்ததால் வந்த வினை : ரயிலில் அடிபட்டு 3 இளைஞர்கள் பரிதாப பலி !
DIGI TEAM 1
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள செட்டிபுண்ணியம் பகுதியில் இளைஞர்கள் ரயில்வே இருப்புப் பாதையில் அமர்ந்து செல்பி மோகத்தால் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று வழக்கம்போல் மாலை தாம்பரம் செங்கல்பட்டு இடையே மூன்றாவதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் இருப்புப் பாதையில் அமர்ந்து வீடியோக்களை பதிவு செய்து வந்துள்ளனர்.

சென்னை தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லக்கூடிய விரைவு ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயில்வே இருப்புப் பாதையில் நின்று செல் போனில் வீடியோக்களை பதிவு செய்துள்ளனர்

அப்போது எதிர்பாராதவிதமாக ரயில் மோதிய விபத்தில் பிரகாஷ் (17), மோகன் (17), அசோக்குமார் (24) ஆகிய மூன்று இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இவர்கள் மூவரும் தினந்தோறும் ஒன்றாக கூடி இன்ஸ்டாகிராமில் அதிக அளவில் வீடியோக்களை பதிவிட்டது தெரியவந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே இருப்புப் பாதை போலிஸார் மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

banner

Related Stories

Related Stories