தமிழ்நாடு

“பேருந்தில் சென்ற பள்ளி மாணவனுக்கு பாலியல் சீண்டல் - போக்சோவில் முதியவர் கைது”: போலிஸ் அதிரடி நடவடிக்கை!

ராமநாதபுரத்தில் பேருந்தில் சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வியாபாரியை போக்சோ சட்டத்தின் கீழ் போலிஸார் கைது செய்தனர்.

“பேருந்தில் சென்ற பள்ளி மாணவனுக்கு பாலியல் சீண்டல் -  போக்சோவில் முதியவர் கைது”: போலிஸ் அதிரடி நடவடிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம்காத்தான் பகுதியைச் சேர்ந்த மாணவர் ராமநாதபுரம் நகரில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் அரசு பேருந்தில் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

இந்நிலையில், வியாழக்கிழமை மாலையில் அவர் தனது குடும்பத்தினருடன் ராமநாதபுரம் நகர் அரண்மனைத் பகுதியான மத்திய கடிகார சந்திப்பிலிருந்து நகரப் பேருந்தில் ஏறி கிழக்கு கடற்கரை சாலைப் பகுதிக்குச் சென்றுள்ளார்.

பேருந்து புதிய பேருந்து நிலையத்துக்கு வந்தபோது, அங்கு கீழக்கரையைச் சேர்ந்த கைலி வியாபாரி ஜகுபர் ஜலாலுதீன் (57) பேருந்தில் ஏறி மாணவர் அருகே உட்கார்ந்துள்ளார். இதனைதொடர்ந்து,பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கைலி வியாபாரி மாணவரிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அதையடுத்து கேணிக்கரை காவல் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய மாணவர், குடும்பத்தினர் உதவியுடன் வியாபாரியை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மாணவர் அளித்த புகாரின் பேரில் ஜகுபர் ஜலாலுதீன் மீது போக்சோ சட்டத்தில் போலிஸார் வழங்கு பதிவு செய்து கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories