தமிழ்நாடு

ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரம்; ரயில் நிலையத்தில் வைத்து பெண்ணை அரிவாளால் வெட்டிய பூசாரி!

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை அரிவாளால் வெட்டிய கோவில் பூசாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரம்; ரயில் நிலையத்தில் வைத்து பெண்ணை அரிவாளால் வெட்டிய பூசாரி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த ராமன் கோவில் பகுதியைச் சேர்ந்த பீபிஜான் (39) இவர் திருமணமாகி கணவருடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவர் திருமணம் ஆகாமல் ஈஸ்வரன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார்.

பூசாரி சம்பத்துக்கும் பீபிஜானுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக தெரிய வருகிறது. அவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பூசாரி சம்பத்திடம் பீபிஜான் கடனாக 50 ஆயிரம் வாங்கியதாக கூறப்படுகிறது.

மேலும் கடனுக்கு கொடுத்த சம்பத் அடிக்கடி பீபிஜானை உல்லாசத்துக்கு வற்புறுத்தி அழைத்துள்ளார். இந்த விவகாரம் பீபிஜான் கணவருக்கு தெரிய வர மனைவியை கண்டித்துள்ளார்.

சம்பத்திடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்துள்ளனர். ஆனால் சம்பத் மீண்டும் மீண்டும் பீபிஜானை ஆசைக்கு இணங்குமாறு கூறியதால் அவர் மறுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் செஞ்சி பானப்பாக்கம் ரயில் நிலையத்தில் பீபிஜான் காத்திருந்தபோது அவரை பின்தொடர்ந்த சம்பத் ரயில் நிலையத்தில் வைத்து வாக்குவாதம் செய்துள்ளார்.

வாக்கு வாதம் முற்றவே சம்பத் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பீபிஜானை தலையில் வெட்டிவிட்டு தப்பியுள்ளார். படுகாயத்துடன் சரிந்த பீபிஜானை அங்கு உள்ளவர்கள் மீட்டு அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். தற்போது அவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக கடம்பத்தூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்து வந்த பூசாரி சம்பத்தை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories