தமிழ்நாடு

கருவறைக்குள் சிலையை பதுக்கி விற்க முயற்சி; சீர்காழி குருக்கள் கைது; 2 சிலைகள் மீட்பு!

சீர்காழி அருகே 4 சிலைகள் காணாமல் போன வழக்கு விசாரணையில் கோயிலில் கருவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.

கருவறைக்குள் சிலையை பதுக்கி விற்க முயற்சி; சீர்காழி குருக்கள் கைது; 2 சிலைகள் மீட்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் மன்னங்கோயில் கிராமத்திலுள்ள மன்னார்சாமி, நல்லகாத்தாயி கோயிலுக்கு சொந்தமான 1) ஸ்ரீ நல்லகாத்தாயி அம்மன், 2) ஸ்ரீ கஞ்சமலையீஸ்வரர், 3) ஸ்ரீ ஆஞ்சநேயர், 4) ஸ்ரீ விநாயகர் ஆகிய 4 உலோக சிலைகள் 40 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலில் இருந்து எடுக்கப்பட்டு கையாடல் செய்யப்பட்டுவிட்டது. தற்போது எங்கு உள்ளன என்ற விபரம் தெரியாமல் உள்ளது.

எனவே மேற்படி சிலைகளை கண்டறிந்து தருமாறு ஏனாக்குடி கிராமத்தை சேர்ந்த நா.வீரமணி, என்பவர் சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு அளித்த புகார் மனுவின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருவறைக்குள் சிலையை பதுக்கி விற்க முயற்சி; சீர்காழி குருக்கள் கைது; 2 சிலைகள் மீட்பு!

சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறை இயக்குநர் ஜெயந்த் முரளி, சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறை தலைவர் தினகரன்., ஆகியோரின் உத்தரவுப்படி இவ்வழக்கின் புலன் விசாரணையானது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் தமிழ்செல்வன், பாலசந்திரன், சின்னதுரை மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பாக இன்று 15.03.2022ம் தேதி சீர்காழி அருகில் உள்ள நெம்மேலி கிராமத்தை சேர்ந்த குருக்கள் சூர்யமூர்த்தி என்பவரை விசாரணை செய்தபோது அவர் அளித்த வாக்குமூலத்தின்படி நெம்மேலி விசாலாட்சி விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் விசாலாட்சி அம்மன் சிலைக்கு பின்புறம் அவரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிரதோஷ நாயகர் பிரதோஷ நாயகி உலோக சிலையும், இந்துசமய அறநிலையத்துறையின் உரிய அனுமதி இல்லாமல் அவர் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கணக்கில் இல்லாத காத்தாயி அம்மன் வெள்ளி கவசம் - 1, சிறிய வெள்ளி குத்து விளக்கு -2, சிறிய வெள்ளி குடம்-1 மற்றும் சனீஸ்வரன் வெள்ளி கவசம் கையாடல் செய்து வைத்திருந்தது ஆகியன சாட்சிகள் முன்னிலையில் கைப்பற்றப்பட்டு கும்பகோணம் கூடுதல் குற்றவியல் தலைமை நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.

கருவறைக்குள் சிலையை பதுக்கி விற்க முயற்சி; சீர்காழி குருக்கள் கைது; 2 சிலைகள் மீட்பு!
கருவறைக்குள் சிலையை பதுக்கி விற்க முயற்சி; சீர்காழி குருக்கள் கைது; 2 சிலைகள் மீட்பு!

இதுதொடர்பாக கோயில் குருக்கள் சூர்யமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற ஆஜர்படுத்தப்படவுள்ளார். கைப்பற்றப்பட்டுள்ள பிரதோஷ நாயகர் பிரதோஷ நாயகி சிலைகள் எந்த கோயிலை சார்ந்தது என்பதை கண்டுபிடிக்கப்பட வேண்டியுள்ளது. இந்த பிரதோஷ நாயகர் பிரதோஷ நாயகி சிலைகள் 2 கோடி ரூபாய்க்கு மேல் விற்கும் முயற்சியில் எவரும் நுழைய முடியாத விசாலாட்சி அம்மன் கருவறைக்குள் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories