
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை போரிவலி மேற்கு (MHB) காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது குறித்துப் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் குழந்தையை அழைத்துச் சென்றது உறுதியானது.
அதன்பின்னர் அந்த நபர் குறித்து நடத்திய விசாரணையில், அவர் பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமானவர் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலிஸார் அவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்துக் குழந்தையின் பெற்றோர் கண்ணீருடன் கூறுகையில், ”எங்கள் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளனர்.






