தமிழ்நாடு

’பெரும்பாக்கத்தில் ஒரு பாசமலர்’ பிறந்தநாளுக்கு அண்ணன் வராததால் விரக்தி; 15வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை

பெரும்பாக்கத்தில் தனது பிறந்தநாள் அன்று உடன் பிறந்த சகோதரன் வராததால் 10ம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

’பெரும்பாக்கத்தில் ஒரு பாசமலர்’  பிறந்தநாளுக்கு அண்ணன் வராததால் விரக்தி; 15வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் இந்திராகாந்தி தெருவில் குடும்பத்துடன் வசித்து வரும் பள்ளி மாணவி உதயகுமாரி (15) நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

உதயகுமாரி அருகில் உள்ள சித்தலப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று பிறந்தநாள் என்பதால் புத்தாடை அணிந்து வீட்டில் எளிமையாக கொண்டாட உள்ள நிலையில் தாய், தந்தை இருவரும் வழக்கம் போல் காலையில் வேலைக்கு சென்ற நிலையில் பள்ளிக்கு செல்லாமல் தனது இரு தம்பிகளுடன் வீட்டிலேயே இருந்துள்ளார்.

முக்கியமாக தன்னுடைய பிறந்தநாளுக்கு திருவண்ணாமலையில் இருக்கும் அண்ணன் சந்திரன் வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அண்ணன் வராத விரக்தியில் மன உளைச்சலில் இருந்த உதயகுமாரி வீட்டின் அறையில் நைலான் கயிறு மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனை பார்த்த வீட்டிலிருந்த சிறுவர்கள் அருகே வசிக்கும் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது தூக்கில் தொங்கியபடி இருந்த உதயகுமாரியை மீட்டு 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்சில் இருந்த செவிலியர் உதயகுமாரியை பரிசோதித்து பார்த்தபோது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததாக கூறினர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பெரும்பாக்கம் போலிஸார் உதயகுமாரியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து பெரும்பாக்கம் போலிஸார் விசாரணை மேற்கொண்டதில் அண்ணன் சந்திரன் உதயகுமாரியின் பிறந்தநாளுக்கு திருவண்ணாமலையிலிருந்து பெரும்பாக்கம் வீட்டிற்கு வராததால் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது விசாரணையில் தெரியவந்ததாக போலிஸார் தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories