தமிழ்நாடு

பல் துலக்கும்போது பெண்ணின் வாயில் சிக்கிய டூத் பிரஷ்; காஞ்சியில் வெற்றிகரமாக அகற்றிய அரசு மருத்துவர்கள்!

பெண்மணியின் வாயின் இடுக்குகளில் வசமாக மாட்டிக்கொண்ட டூத் பிரஷை முகத்தின் வழியாக அகற்றிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பல் துலக்கும்போது பெண்ணின் வாயில் சிக்கிய டூத் பிரஷ்; காஞ்சியில் வெற்றிகரமாக அகற்றிய அரசு மருத்துவர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காஞ்சிபுரம் எண்ணெய்காரத் தெருவை சேர்ந்த ரேவதி (வயது 34) என்பவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டில் வைத்து பல் துலக்கி கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக ரேவதி வழுக்கி கீழே விழுந்ததில் வாயின் பல் இடுக்குகளுக்கு இடையே டூத் பிரஷ் வசமாக சிக்கிக் கொண்டது.

இதனால் வாயைத் திறக்க முடியாமலும் மூட முடியாமலும் அலறிய ரேவதியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அரசு தலைமை மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் நரேன் மற்றும் வெங்கடேசன் ஆகியோர்கள் ஆலோசனை செய்து ரேவதியின் கண்ணத்தின் வழியாக டூத் பிரஷை அகற்றலாம் என முடிவெடுத்தனர்.

பல் துலக்கும்போது பெண்ணின் வாயில் சிக்கிய டூத் பிரஷ்; காஞ்சியில் வெற்றிகரமாக அகற்றிய அரசு மருத்துவர்கள்!

அதன்படி ரேவதிக்கு வலி ஏற்படாமல் இருக்க மயக்க மருந்து செலுத்தி வாயின் பல் இடுக்குகளில் வசமாக சிக்கிக் கொண்டிருந்த டூத் பிரஷை முகத்தின் வெளிப்புறத்தின் காதில் கீழே துளையிட்டு கண்ணத்தின் வழியாக வெளியே வந்த டூத் பிரஷின் பாதியை வெட்டி எடுத்தனர்.

அதேபோல் வாயில் பல் இடுக்குகளின் மத்தியில் மிக ஆழமாக சிக்கிக்கொண்டிருந்த டூத் பிரஷின் பாதியை ஆப்ரேஷன் செய்து வாயிலிருந்து அகற்றினர்.

தற்போது ரேவதி மருத்துவமனையில் பாதுகாப்பாக சிகிச்சை பெற்று வருகிறார். முகத்தின் வழியாக டூத் பிரஷை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதேபோல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் நரேன் மற்றும் டாக்டர் வெங்கடேசன் ஆகியோர்களுக்கும் பாராட்டுகள் குவிகிறது.

banner

Related Stories

Related Stories