இந்தியா

“டூத் பேஸ்ட்-க்கு பதிலாக எலி மருந்தை வைத்து பல் துலக்கிய கல்லூரி மாணவி” : தூக்கத்தில் நடந்த விபரீதம் !

டூத் பேஸ்ட்-க்கு பதிலாக எலி மருந்தை வைத்து பல் துலக்கிய கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.

“டூத் பேஸ்ட்-க்கு பதிலாக எலி மருந்தை வைத்து பல் துலக்கிய கல்லூரி மாணவி” : தூக்கத்தில் நடந்த விபரீதம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கர்நாடக மாநிலம் சுலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷர்வயா. இளம் பெண்ணான இவர், கல்லூரி விடுமுறை என்பதால், வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 14ம் தேதி வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், தூக்க கலக்கத்தில் இருந்த ஷர்வயா, பல் துலக்குவற்காக அவர் பிரஷ்யை எடுத்து பேஸ்டை அப்ளை செய்து பல் துலக்க ஆரம்பித்துள்ளார்.

அப்போது, உடனே சுதாரித்துக்கொண்ட ஷர்வயா, பேஸ்ட் இல்லை என்பதை உணர்ந்து அது என்ன என்பதைப் பார்த்துள்ளார். அப்போது தான் தவறுதலாக டூத் பேஸ்ட்-க்கு பதிலாக எலி மருந்தை வைத்து பல் துலக்கியது தெரியவந்தது.

இதனையடுத்து உடனே அதிர்ச்சியடைந்த ஷர்வயா, வாயை சுத்தம் செய்துவிட்டு, பேஸ்டை எடுத்து பல் துலக்கிவிட்டு பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளார். அதேவேளையில், வீட்டில் பெற்றோரிடம் சொன்னால், கேலி செய்வார்கள் என நினைத்து சொல்லாமல் இருந்துள்ளார்.

இதனையடுத்து இரண்டு நாள் கழித்து அவருக்கு வயிற்று வலி ஏற்படவே, தனது பெற்றோரிடம் எலி மருந்தில் பல் துலக்கிய விஷயத்தை கூறியுள்ளார். இதனையடுத்து அவரை மங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில், நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories