தமிழ்நாடு

‘நீட்’.. 7 கோடி மக்களின் உணர்வுகளுக்கு எதிராக ஆளுநரை செயல்பட வைப்பது யார்? : தமிழர்களின் தரமான பதிலடி!

ஆளுநர் ‘நீட்’ மசோதா பற்றி எடுத்த முடிவு, அறிக்கை குறித்த விமர்சனம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘நீட்’.. 7 கோடி மக்களின் உணர்வுகளுக்கு எதிராக ஆளுநரை செயல்பட வைப்பது யார்? : தமிழர்களின் தரமான பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆளுநர் ‘நீட்’ மசோதா பற்றி எடுத்த முடிவு, அறிக்கை குறித்த விமர்சனம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப்பதிவு வருமாறு:-

“நான் ‘நீட்’ தேர்வை மூன்று முறை எழுதியும் எனக்குக் கிடைக்கவில்லை. அதனால நான் இப்போ எம்.பி.பி.எஸ். படிக்க உக்ரைனில் ட்ரை செய்துக்கிட்டு இருக்கிறேன்”. (தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாத மேடை நிகழ்ச்சியில் ஒரு மாணவி பேசியது) இந்த மாணவி ஒரு சாதாரண வாட்ச்மேனுடைய பெண். இந்த மாணவியைப் போலத்தான் நீட் தேர்வை எழுதி பாஸ் ஆனாலும், தமிழ்நாட்டினுடைய ஏழை மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும், டாக்டருக்குப் படிக்கணும் என்கின்ற விஷயத்தை வெறும் கனவா மட்டுமே சுமந்துக்கிட்டு இருக்காங்க.

நீட்டையே தமிழ்நாட்டிற்கு வேண்டாம் என்று பல தடவை விளக்கிப்பேசியாச்சு. நீட்டு தமிழ்நாட்டு மாணவர்களை எந்த அளவிற்கு பாதித்து இருக்கு என்று கடந்த 2017ல் இருந்து மருத்துவப் படிப்பில் சேர்ந்து இருக்கின்ற மாணவர்களுடைய எண்ணிக்கையே சொல்லிடும். இந்த பாழாப்போன நீட்டுக்காக இதுவரைக்கும் 30க்கும் மேற்பட்ட பிஞ்சு உயிர்களையும் தமிழ்நாடு பறிகொடுத்து இருக்கு.

ஆனாலும், நீட் எழுதியே ஆகணும் என்று பி.ஜே.பி. ஏன் சொல்லுதுன்னு இப்போ உங்களுக்கு புரிந்து இருக்கும். நீட்டால் கிராமப்புற மாணவர்கள் பயனடைகிறார்கள், நீட் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும் உதவுதுன்னு ஒரு மாநிலத்தினுடைய ஆளுநர் சொல்கிறார் என்றால் அதற்கு என்ன அர்த்தம்.?

ஏழு கோடி தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிரான ஒரு கருத்தை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக ஒரு அரசு உயர்பொறுப்பில் இருக்கிறவரை எது சொல்ல வைக்கிறது? வெள்ளப் பாதிப்பு குறித்து ஆளுநரை பார்க்கப்போனப்போ நீட் தேர்வு விலக்கு குறித்தும் பேசணும்ன்னு முதலமைச்சர் அறிக்கை விட்டா, வெள்ளப் பாதிப்பு குறித்து மட்டும் பேசணும்ன்னு ஆளுநர் மாளிகையில் இருந்து பத்திரிகை செய்தி வருது. நீட் என்கிற வார்த்தையே ஆளுநருடைய அறிக்கையில் இல்லை. இப்படி உண்மையா நடந்த ஒரு விஷயத்தை மறைக்கிறது யாருடைய பார்முலா என்று தெரிகிறதா?

அது மட்டுமல்ல, குடியரசு தின வாழ்த்தில் ‘நீட்’ ரொம்ப நல்லது. நீட் தமிழ்நாட்டிற்கு வேண்டும்ன்னு 8 பக்க அறிக்கை கொடுத்திருக்கிறார். அதாவது தனக்கு அனுப்பப்பட்ட நீட் மசோதா பற்றி எந்த ஒரு முடிவும் அரசுக்கு சொல்றதுக்கு முன்னாடி, பொது வெளியிலே தெரிவிச்சார் ஆளுநர். அடுத்ததா பா.ஜ.க. என்ன காரணத்தைச் சொல்லி நீட் வேண்டும் என்று சொல்லுதோ அதே காரணத்தைத் தான் இந்த ஆளுநரும் சொல்கிறார்.

தமிழ்நாட்டில் வந்து இந்தி படி என்று சொல்கிறார். சுருக்கமாகச் சொல்லணும்ன்னா மக்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தை மதிக்காமல் எது மக்களுக்கு நல்லதுன்னு நான் சொல்றேன் நீங்க அதைக் கேளுங்கன்னு சொல்கிறார் ஆளுநர்.

கூர்ந்து கவனித்தால் உங்களுக்குப் புரியும், ஆர்.என்.ரவி என்கிறது வெறும் பெயர் மட்டுமல்ல, அது ஒரு கட்ட சித்தாந்தம். ஜனநாயகத்தைப் படுகொலை செய்கின்ற ஆர்.எஸ்.எஸ். என்கிற சித்தாந்தம். மக்கள் எக்கேடோ கெட்டுப் போனால் எனக் கென்னன்னு நினைக்கின்ற சித்தாந்தம். எல்லோரும் சமம் என்று சொல்கின்ற அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல், சமூக நீதியை குழி தோண்டி புதைக்கின்ற சித்தாந்தம். இந்த ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. எல்லாம் கொரோனாவோட ஒமைக்ரான் வைரஸ் மாதிரி, எவ்வளவு வேகமாக பரவினாலும், என்னத்தான் காய்ச்சல் வந்தாலும் ஒரு “டோலோ 650” வை போட்டுட்டு போய்க்கிட்டே இருக்கும் தமிழ்நாடு! ”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories