தமிழ்நாடு

“தமிழ்நாட்டில் விரைவில் 500 கலைஞர் உணவகங்கள் திறக்கப்படும்” : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சொன்ன தகவல்!

விரைவில் 500 கலைஞர் உணவகங்கள் திறக்கப்பட இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

“தமிழ்நாட்டில் விரைவில் 500 கலைஞர் உணவகங்கள் திறக்கப்படும்” : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சொன்ன தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாட்டில் விரைவில் 500 கலைஞர் உணவகங்கள் திறக்கப்பட இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பட்டினி இல்லாத நிலையை உருவாக்க சமூக சமையல் கூடங்களை அமைக்க வலியுறுத்தி வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தமிழகத்தில் 4 வயது சிறுவன் பட்டினியால் உயிரிழந்தது தொடர்பாக உச்சநீதிமன்றம் வருத்தம் தெரிவித்தது.

இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு, 654 சமூக சமையல் கூடங்கள் “அம்மா உணவகம்” என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் சுமார் 66 ஆயிரம் பேருக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் விரைவில் 500 கலைஞர் உணவகங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஒருவர் கூட பசியுடன் இரவு உறங்கப் போவதில்லை” என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகங்கள் மூடப்படும் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏழைகளின் பசி தீர்க்கும் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என அறிவித்தார். இது அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்பட்டது.

முன்னதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, “அனைத்து மக்களுக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதற்கான கொள்கைகளை செயல்படுவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

முத்தமிழறிஞர் கலைஞரால் தமிழக மக்களுக்கு சத்தான உணவு பொருட்கள் வழங்கும் பொருட்டு சிறப்பு பொது விநியோகத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கலைஞர் உணவகம் என்ற பெயரில் மேலும் 500 உணவகங்களை திறப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்கும்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories