தமிழ்நாடு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகள்.. 3 சுற்றுகள் முடிவு- 10 காளைகளை அடக்கி அசத்திய இளைஞர்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போதைய நிலையில் சித்தாலங்குடியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் 10 காளைகளை பிடித்து முதலிடத்தில் உள்ளார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகள்.. 3 சுற்றுகள் முடிவு- 10 காளைகளை அடக்கி அசத்திய இளைஞர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி சற்றுமுன் தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தனர்.

700 காளைகள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்கியுள்ளது. 300 மாடுபிடி வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். வீரர்கள் உறுதிமொழி ஏற்று ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதேபோன்று ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படும் அனைத்து காளைகளுக்கும் தலா ஒரு தங்கக்காசு வழங்கப்பட்டு வருகிறது.

சிறந்த மாடுபிடி வீரருக்கு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதேபோல் மாடுகளை பிடித்து வெற்றிவாகை சூடும் அனைத்து வீரர்களுக்கும் தலா ஒரு தங்கக் காசு வழங்கப்பட்டு வருகிறது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் முதல் சுற்று முடிவில் 115 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இரண்டாம் சுற்று முடிவில் வாடிவாசலில் இருந்து மொத்தம் 224 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மூன்றாம் சுற்று முடிவில் 379 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மூன்றாம் சுற்று முடிவு :

காளைகள்:379

மாடுபிடி வீரர்கள்:150

காயம்:14

அடுத்த சுற்றுக்கு 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாடுபிடி வீரர்கள் :

தற்போதைய நிலையில் முதலிடம் : கோபாலகிருஷ்ணன் (Y-03)- சித்தாலங்குடி - 10 காளைகள்

இரண்டாம் இடம்

தண்டீஸ்வரன் (B-14) - வாகைகுளம் - 6காளைகள்

banner

Related Stories

Related Stories