தமிழ்நாடு

”காளைக்கு மட்டுமல்ல காளையருக்கும் கார் பரிசு” - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சுவாரஸ்ய முன்னேற்பாடு!

300 மாடுபிடி வீரர்கள், 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டி போட்டியை முன்னிட்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

”காளைக்கு மட்டுமல்ல காளையருக்கும் கார் பரிசு” - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சுவாரஸ்ய முன்னேற்பாடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை நடைபெறும் நிலையில் அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதியிலிருந்து, காளைகள் வரும் பகுதி, கலெக்சன் பாய்ண்ட், ஜல்லிக்கட்டு நடைபெறும் அனைத்து இடங்களுக்கும் சென்று மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காவல்துறை மதுரை சரக டிஐஜி பொன்னி, கோவிந்தன், ரகுபதி ஆகிய கிராமகமிட்டியினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இப்படி இருக்கையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கும், சிறந்த மாடுபிடி வீரருக்கும் என இருவருக்கும் முதல்வர் அவர்கள் சார்பாகவும், தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ சார்பாகவும் இரண்டு கார்கள் பரிசுகளாக வழங்கப்பட இருக்கிறது.

300 மாடுபிடி வீரர்கள், 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டி போட்டியை முன்னிட்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இதேபோன்று மருத்துவ உதவிக்காக 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும், கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ்சும் தயார்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. போட்டி நடைபெறும் பகுதிகளில் மீட்பு மற்றும் அவசர உதவிகளுக்காக தீயணைப்புதுறை, ரெட்கிராஸ் அமைப்பினர் பணியில் ஈடுபடுவர்.

போட்டியில் ஒரு சுற்றுக்கு 30 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்படுவர். வெற்றிபெறும் காளையர்கள், காளைகளுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள், பைக்,  குக்கர், பிரிட்ஜ், கிரைண்டர் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்படும். அதே போல் மாடுகளை பிடிக்கும் வீரர்களுக்கும் தலா ஒரு தங்க காசு வழங்கப்பட உள்ளது.

போட்டியை காண்பதற்காக 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

banner

Related Stories

Related Stories