தமிழ்நாடு

”எனக்கு ஸ்டாலின் படம் போட்ட காலண்டர்தான் வேனும்” - முதலமைச்சர் உருவம் பொறித்த படத்தை கட்டிப்பிடித்த மழலை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவன் பொறித்த சிறுவன் ஒருவன் கட்டிப்பிடித்து நெகிழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

”எனக்கு ஸ்டாலின் படம் போட்ட காலண்டர்தான் வேனும்” - முதலமைச்சர் உருவம் பொறித்த படத்தை கட்டிப்பிடித்த மழலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒரு சிறுவனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உருவம் பொறித்த 2022ஆம் ஆண்டுக்கான காலண்டரைக் காட்டியும், அ.தி.மு.க. தலைவர்கள் ஆகியோரின் உருவம் பொறித்த காலண்டரையும் காட்டியும் ‘உனக்கு யாரைப் பிடிக்கும்’ என்று பெற்றோர் கேட்க, ‘எனக்கு ஸ்டாலின்தான் பிடிக்கும்’ என்று அச்சிறுவன் மழலை மொழியில் சொல்லி - முதல்வரின் உருவம் பொறித்த காலண்டரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு மகிழ்ந்தான்.

இதுபற்றி சமூக வலைத் தளத்தில் வைரலாகும் வீடியோ குறிப்பு வருமாறு :-

ஒரு சிறுவனிடம் அவனது பெற்றோரால் 2022ஆம் ஆண்டுக்கான இரண்டு காலண்டர்கள் கொடுக்கப்பட்டன. அந்த இரண்டில் ஒன்று ‘இந்தியாவிலேயே சிறந்த முதல்வர்’ எனப் பாராட்டப்பட்ட வரும், ‘மக்களின் முதல்வர்’ என தமிழக மக்களால் புகழப்படுபவருமான முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உருவம் பொறிக்கப்பட்ட காலண்டர்.

மற்றொன்றோ தமிழகத்தை, இருண்ட காலமாக்கி, கொத்தடிமையாக ஆட்சிபுரிந்த அ.தி.மு.க. அரசின் முன்னாள் முதல்வர்களின் உருவம் பொறிக்கப்பட்ட காலண்டர். அந்த இரண்டு காலண்டர்களையும் அந்தச் சிறுவனிடம் காண்பித்து உனக்கு ‘எது வேண்டும்?’ என்று பெற்றோர் திரும்பத் திரும்ப கேட்கிறார்கள். அந்தச் சிறுவனோ அ.தி.மு.க. தலைவர்கள் உருவம் பொறிக்கப்பட்ட காலண்டரை தூக்கி வீசி எறிந்துவிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உருவம் பொறித்த காலண்டரை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

பெற்றோரோ ‘உனக்கு யாரை பிடிக்கும்’ என்று கேட்க "எனக்குப் பிடித்தவர் ஸ்டாலின்தான்" என்று அந்த மழலைச் சிறுவன் செவ்விதழ் வாயால் கூறுகிறான். மீண்டும் மீண்டும் அ.தி.மு.க. தலைவர்கள் உருவம் பொறித்த காலண்டரைக் காட்டி ‘இதை எடுத்துக்கொள்’ என்று வற்புறுத்துகிறார்கள். ஆனால் அந்தச் சிறுவனோ அந்தக் காலண்டரை உதாசீனப்படுத்தி தனது பிஞ்சுக்கரங்களால் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உருவம் பொறித்த காலண்டர்தான் வேண்டும் என்று அடம்பிடித்து விரும்பி எடுத்துக் கொண்டு அதன் மீது படுத்து மகிழ்கிறான்.

இந்தியத் திருநாட்டின் கோடானகோடி மக்களின் உள்ளங்களிலும், தமிழ் மக்களின் இதயங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உருவம் பொறித்த படம். இன்றோ சிறுவனின் சிறு இதயத்தையும் கொள்ளையடித்திருக்கிறது என்றால் அதை என்னவென்று புகழ்வது! சின்னஞ்சிறு சிறுவனின் உள்ளத்திலும் நிறைந்திருக்கும் தலைவராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திகழ்கிறார். சிறு கிராமம் முதல் பெருநகரம் வரை - பெரியவர் முதல் சிறியவர் வரை எல்லோரது உள்ளங்களிலும் நிறைந்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்றோ- மழலையின் உள்ளத்திலும் இடம் பிடித்திருக்கிறார் என்பதற்கு இதுவே சான்றாகத் திகழ்கிறது!

நன்றி - முரசொலி நாளேடு

banner

Related Stories

Related Stories