தமிழ்நாடு

“நீங்கள் Failed ஹீரோ, Failed முதலமைச்சர்” : விஜய் பேச்சுக்கு தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் பதிலடி!

மதுராந்தகம் தொகுதியில் தி.மு.க வெற்றி பெற்றால் அரசியல் மாற்றம் ஏற்படப்போவது உண்மைதான்.

“நீங்கள் Failed ஹீரோ, Failed முதலமைச்சர்” : விஜய் பேச்சுக்கு தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நீங்கள் நடித்த 'ஜனநாயகன்' படம் எப்படி பெய்லியர் ஆனதோ, அதேபோல நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஜனநாயகமும் செத்துவிட்டது. நீங்கள் Failed ஹீரோ, Failed முதலமைச்சர் என நேற்று மதுராந்தகம் பிரச்சாரத்தில் பேசிய முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு, தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய பரந்தாமன் "திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை வைத்துக் கொண்டுதான் த.வெ.க அரசு தனது வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறது. மரகதம் குமரவேலை வைத்துக் கொண்டு ஊழலைப்பற்றி விஜய் பேசலாமா? பெரும்பான்மை இல்லாததால் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கிக் கொண்டு, தங்களைத் தூய சக்தி என்று எப்படி விஜய் சொல்ல முடியும்?

மதுராந்தகம் தொகுதி மக்கள் எவ்வளவு துன்பத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பது முதலமைச்சர் விஜய்க்கு தெரியுமா? நாங்கள் எதிர்த்த, நீங்கள் ஆதரித்த விபி-ஜி ராம் ஜி திட்டப் பயனாளர்களுக்கு இரண்டு மாதங்களாக ஊதியம் கிடைக்கவில்லை. இதுபற்றி முதலமைச்சர் விஜய்க்கு தெரியுமா? விலைவாசி உயர்வால் இந்தத் தொகுதி மக்கள் கவலையில் இருக்கிறார்கள். இதுபற்றி எல்லாம் அவருக்கு தெரியுமா?

நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது, உங்கள் வீட்டு அம்மாவையே உங்கள் கட்சிக்காரர்கள் அவதூறாகப் பேசினார்கள். இதைத் தட்டிக்கேட்க உங்களால் முடியவில்லை. உங்கள் வீட்டுப் பெண்களையே பாதுகாக்க முடியவில்லை, தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பு பற்றிப் பேச உங்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது?

அதிமுகவை விமர்சித்துப் பேச முடியாமல் 'மற்றும் பலர்' என்று சொல்கிறீர்கள். இந்த 'மற்றும் பலரை' வைத்துக் கொண்டுதான் சட்டமன்றத்தில் பெரும்பான்மையைக் காட்டினீர்கள். 107 உறுப்பினர்களை வைத்துள்ள உங்களுக்கு எப்படி 126-க்கும் மேல் வாக்குகள் கிடைத்தன? இதிலிருந்தே தெரிகிறது, யார் ஊழல்வாதி என்று.

மதுராந்தகம் தொகுதியில் தி.மு.க வெற்றி பெற்றால் அரசியல் மாற்றம் ஏற்படப்போவது உண்மைதான். தறிகெட்டு இருக்கும் த.வெ.க அரசுக்கு மதுராந்தகம் மக்கள் தி.மு.க மூலமாக மூக்கணாங்கயிறு போடுகிறார்கள் என்றால், அரசியல் மாற்றம் வரும் என்று சொல்வதற்கு என்ன தவறு இருக்கிறது?

நீங்கள் நடித்த 'ஜனநாயகன்' படம் எப்படி பெய்லியர் ஆனதோ, அதேபோல நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஜனநாயகமும் செத்துவிட்டது. நீங்கள் Failed ஹீரோ, Failed முதலமைச்சர்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories