தமிழ்நாடு

நிறைவேறாத காதல் ஆசை.. கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை: சோகத்தில் மூழ்கிய கிராமம்!

காதால் தோல்வியால் வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

நிறைவேறாத காதல் ஆசை.. கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை: சோகத்தில் மூழ்கிய கிராமம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஈரோடு மாவட்டம், கருக்குபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். வாலிபரான இவர் தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் விஜய் மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர்.

அப்போது, வீட்டின் அருகே உள்ள சாலையில் ரத்தவெள்ளத்தில் விழுந்துகிடந்துள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் அவரிடம் நடந்தவற்றைக் கேட்டுள்ளனர். இதற்கு அவர், "தான் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், தங்கையின் திருமணம் தள்ளிக்கொண்டே செல்வதால், எனது காதல் நிறைவேறவில்லை.

இதனால், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து சாணி பவுடர் குடித்து, கத்தியால் கழுத்தையும், இடது மணிக்கட்டை அறுத்துக் கொண்டதாக" கூறியுள்ளார்.

இதைத்கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories