தமிழ்நாடு

“வட இந்தியத் தலைவர்கள் மு.க.ஸ்டாலினிடம் கற்றுக் கொள்ள வேண்டும்”: குவியும் பாராட்டு! #Stalin4SocialJustice

27 சதவிகித இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டியுள்ளனர்.

“வட இந்தியத் தலைவர்கள் மு.க.ஸ்டாலினிடம் கற்றுக் கொள்ள வேண்டும்”: குவியும் பாராட்டு! #Stalin4SocialJustice
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

27 சதவிகித இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டி பலர் முகநூலில் பதிவிட்டுள்ளது வருமாறு :-

#ஸ்டாலின் என்றால் சமூக நீதி...

அபிஷேக் யாதவ்

‘நீட்’ தேர்வில் அகில இந்தியப் பிரிவில் இதரப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக நடைபெற்ற நீண்ட நெடிய போராட்டத்தில் வெற்றி கண்டதற்காக அவருக்கு (மு.க.ஸ்டாலினுக்கு) நன்றி சொல்லுவோம். வட இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்டப் பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்கள் அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லை அவர்களுக்குத் தேவை ஒன்றே ஒன்று தான் - வாக்கு (VOTE)

மயூர் குடுபாலே

அம்பேத்கரிய இயக்கம் தவிர்த்து மற்ற வட இந்திய இதர பிற்படுத்தப்பட்ட தலைவர்கள் எல்லாம் தூங்கி வழிந்து கொண்டு அடிமைகளாக இருந்து கொண்டிருக்கும் போது, தி.மு.க. மற்றும் அதன் சட்டப் பிரிவு மட்டும் செயல்படத் தொடங்கி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியது. இப்போதாவது வட இந்தியத் தலைவர்கள் பெரியாரை படிக்கட்டும். அதை ஏற்றுக் கொள்ளட்டும்.

ட்ரைபுள் ஆர்மி

இவர்தான் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் உண்மையான தலைவர். நன்றி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே! சமூக நீதிக்காக வட இந்தியத் தலைவர்கள் யாரும் செயல்படுவதே இல்லை. அவர்கள் எல்லாம் ஸ்டாலினிடமிருந்து பலவற்றை கற்றுக் கொள்ள வேண்டும்.

கைலாஷ் தாஸ்

கூட்டாட்சி ஜனநாயகத்தின் முக்கிய முகங்களில் ஒன்றாக ஸ்டாலின் திகழ்கிறார். பா.ஜ.க.வின் இந்தி ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராட, இந்தி பேசாத அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைவது அவசியம்.

அவினாஷ் சந்திர பைண்ட்

ஸ்டாலின் அவர்களே! நாட்டின் கடிவாளத்தை உங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் உங்களோடு இருக்கின்றோம். நீங்கள், நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறோம்.

“வட இந்தியத் தலைவர்கள் மு.க.ஸ்டாலினிடம் கற்றுக் கொள்ள வேண்டும்”: குவியும் பாராட்டு! #Stalin4SocialJustice

சுமித் செளஹான்

நீட்’ தேர்வில், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு பெற வெகு முயற்சி எடுத்துக் கொண்டதற்காக மு.க.ஸ்டாலின் அவர்களை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன். இந்தியாவில் ‘நீட்’ இயக்கத்தினை எதிர்த்து போராடுபவர். பின்னணியில் உண்மையான சக்தியாக அவர் இருக்கிறார்.

ரவி சங்கர் பிரசாத்

தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும் ‘நீட்’ தேர்வில் அகில இந்திய கோட்டாவில் இதரப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டிற்காக போராடாமல் இருந்திருந்தால், இன்றைய தினம் ஒரு மாபெரும் வெற்றி கிடைத்திருக்காது. இனி ஆண்டு தோறும் 4 ஆயிரம் டாக்டர்கள் கூடுதலாக இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் நியமிக்கப்படுவார்கள். நன்றி

டாக்டர் மணீஷ் பாங்கர்

ஜனநாயகத்தின் முக்கிய கூறு பிரதிநிதியாக இருப்பது ஆகும். ‘நீட்’ விவகாரத்தில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்குச் சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பல்வேறு தடைகள் இருக்கிறது என்பதால் அல்ல; மு.க.ஸ்டாலின் அவர்களின் இடையறா முயற்சியின் காரணமாகவே அவ்வாறு தீர்ப்பு வெளியானது. அதற்காக தமிழக முதல்வரான அத்தலைவர்க்கு நன்றி சொல்லியாக வேண்டும்.

கமலேஷ் மேக்வால்

மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தியாவின் சிறந்த முதல் அமைச்சர். மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்களின் தலைமையின் கீழ் தான் இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். நாட்டில் உள்ள அனைவருக்கும் சமூக நீதியும், சமத்துவமும் அப்போது தான் சாத்தியம்.

கன்சர்ன்டு நாகரிக்

ஒருவர் திரும்பிப் போரிட தீர்மானித்தால் எந்த விஷயமும் சாத்தியமாகும். எந்தச் செயல்களையும் பெற முடியும். மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்களை நிறைவேற்றி சமூக நீதியை தகுதியுள்ள மக்களுக்கு பெற்றுத் தருவதற்கு மிகச் சரியான உதாரணம். வட இந்தியாவில் உள்ள தலைவர்கள் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

banner

Related Stories

Related Stories