இந்தியா

”இனி டீச்சர்னுதான் கூப்பிடனும்; No சார்/மேடம்” - பாலின சமத்துவத்துக்கான அடுத்த படி - கேரள பள்ளி அசத்தல்!

ஆசிரியர்களை சார் அல்லது மேடம் என அழைக்கக் கூடாது என பாலக்காட்டில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளி ஒன்று அறிவித்துள்ளது.

”இனி டீச்சர்னுதான் கூப்பிடனும்; No சார்/மேடம்” - பாலின சமத்துவத்துக்கான அடுத்த படி - கேரள பள்ளி அசத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மாணவர்களிடையே பாலின பாகுபாட்டை களையும் வகையில் அண்மையில் கேரளாவில் இருபாலின மாணாக்கர்களுக்கும் பொதுவான சீருடை அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

இதனையடுத்து தற்போது அதே மாநிலத்தில் ஆசிரியர்களை சார் அல்லது மேடம் என அழைக்கக் கூடாது என பாலக்காட்டில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளி ஒன்று அறிவித்துள்ளது.

அதன்படி, சீருடையை அடுத்து ஆசிரியர்களை மாணவர்கள் அழைக்கும் விதத்திலும் பாலின சமத்துவத்தை பேணும் வகையில் இருபாலின ஆசிரியர்களையும் பொதுவாக டீச்சர் என்றே அழைக்க வேண்டும் என பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒளச்சேரி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களிடத்தில் கூறியுள்ளது.

சுமார் 300 மாணவர்களே பயின்று வரும் இந்த பள்ளியில் 8 ஆண் ஆசிரியர்களும், 9 பெண் ஆசிரியைகளும் பணியாற்றி வருகிறார்கள். டீச்சர் என அழைக்கும் வழக்கத்தை கொண்டு வந்த பள்ளி நிர்வாகத்தின் செயலுக்கு பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories