தமிழ்நாடு

நடுவீதியில் 4 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்.. காண்போரை பதைபதைக்க வைக்கும் காட்சிகள்! (VIDEO)

மத்திய பிரதேசம் மாநிலம் தலைநகர் போபால் 4 வயது சிறுமியை தெருநாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுவீதியில் 4 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்.. காண்போரை பதைபதைக்க வைக்கும் காட்சிகள்! (VIDEO)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய பிரதேசம் மாநிலம் தலைநகர் போபாலின் பாக் செவானியா பகுதியில், கூலித் தொழிலாளியின் 4 வயது மகள் வீட்டிற்கு வெளியே தனியாக விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த 4 தெருநாய்கள் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை திடீரென துரத்தியுள்ளது. இதனால் அச்சமடைந்த அச்சிறுமி அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். ஆனால் வெறியில் இருந்த தெருநாய்கள் சிறுமியை விடாமல் துரத்துச் சென்றுக் கடிக்கத் தொடங்கியது.

இதில், சிறுமி தவறி கிழே விழுந்தநிலையில், நாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதற துவங்கியுது. இதனியே அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவர் நாய்கள் சிறுமியைக் கடிப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, விரைந்து செயல்பட்டு கல்லை வீசி நாய்களை விரட்டியடித்தார்.

பின்னர் சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். காண்போரை பதைபதைக்க செய்ய வைக்கும் இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories