தமிழ்நாடு

அதிகரிக்கும் கொரோனா தொற்று.. கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்த சுகாதாரத்துறை !

கொரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

அதிகரிக்கும் கொரோனா தொற்று.. கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்த சுகாதாரத்துறை !
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் குறைந்திருந்த கொரோனா தொற்று சற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகளைத் தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்குச் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “தமிழ்நாடு அரசு அறிவித்து இருக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாகப் பின்பற்றாதவர்கள் மீது கட்டாயம் அபராதம் விதிக்க வேண்டும். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாத நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

அதேபோல் 15 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்தப்படுவதால் அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும், குறிப்பாகப் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். தொற்று கண்டறியப்பட்டுள்ள இடங்களில் தனிமைப்படுத்துதல், தொடர்புடைய நபர்களை கண்டறிதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதிகரிக்கும் கொரோனா தொற்று.. கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்த சுகாதாரத்துறை !

சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

1.15 லட்சம் படுக்கைகள் தமிழ்நாட்டில் தயாராக உள்ள நிலையில் கூடுதலாக 50 ஆயிரம் படுக்கைகள் ஏற்படுத்த வேண்டும். தொற்று கண்டறிய பட்டவர்கள் அவர்களுடன் இருந்த நபர்கள் கட்டாயம் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் தேவையான உதவிகளை அளிக்க வேண்டும் . கொரோனா சிகிச்சை மையங்களை உருவாக்கி, தேவையான படுக்கை வசதிகளை அமைக்க வேண்டும் . தொற்று அதிகம் கண்டறிந்து வரப்படும் மாவட்டங்களில் தீவிர கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories